மாநகராட்சி டெண்டர்களில் முறைகேடு செய்ததாக அமைச்சர் எஸ்.பி.வேலுமணிக்கு எதிரான வழக்கு ஆகஸ்ட் மாதத்திற்கு ஒத்திவைப்பு


மாநகராட்சி டெண்டர்களில் முறைகேடு செய்ததாக அமைச்சர் எஸ்.பி.வேலுமணிக்கு எதிரான வழக்கு ஆகஸ்ட் மாதத்திற்கு ஒத்திவைப்பு
x
தினத்தந்தி 22 July 2020 7:56 PM IST (Updated: 22 July 2020 7:56 PM IST)
t-max-icont-min-icon

மாநகராட்சி டெண்டர்களில் முறைகேடு செய்ததாக அமைச்சர் எஸ்.பி வேலுமணிக்கு எதிரான வழக்கை, ஆகஸ்ட் மாதத்திற்கு, சென்னை உயர் நீதிமன்றம் தள்ளி வைத்தது.

சென்னை,

சென்னை மற்றும் கோவை மாநகராட்சி டெண்டர்களில் முறைகேடு செய்ததாக  அறப்போர் இயக்கம், திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி ஆகியோர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தனர். இந்த வழக்கு இன்று நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஷ் மற்றும் ஹேமலதா அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது.

அப்போது, அமைச்சர் மீதான புகார்கள் தொடர்பாக, கூடுதல் ஆவணங்கள் தாக்கல் செய்ய கால அவகாசம் வழங்க வேண்டும் என மனுதாரர் தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டது. அப்போது, அமைச்சர் எஸ்.பி.வேலுமணி சார்பில் ஆஜரான வழக்கறிஞர், வழக்கு நிலுவையில் உள்ள வரை அமைச்சர் குறித்து  பத்திரிக்கை, ஊடகம் மற்றும் சமூக வலைத்தலங்களில் அறப்போர் இயக்கம் கருத்து தெரிவிக்க தடை விதிக்க வேண்டும் என தெரிவித்தார்.

இதற்கு மறுப்பு தெரிவித்த நீதிபதிகள், தற்போதைய நிலையில் இந்த வழக்கில் எந்த உத்தரவும் பிறப்பிக்க முடியாது என தெரிவித்து, விசாரணையை ஆகஸ்ட் இரண்டாம் வாரத்திற்கு தள்ளி வைத்தனர்.

Next Story