அரசின் நடவடிக்கையை பாராட்டிய நடிகர் ரஜினிக்கு அமைச்சர் எஸ்.பிவேலுமணி நன்றி
அரசின் நடவடிக்கையை பாராட்டிய நடிகர் ரஜினிக்கு அமைச்சர் எஸ்.பி.வேலுமணி நன்றி தெரிவித்துள்ளார்.
சென்னை,
கந்த சஷ்டி கவசத்தை மிகக்கேவலமாக அவதூறு செய்து, பலகோடி தமிழ் மக்களின் மனதைப்புண்படுத்தி கொந்தளிக்கச்செய்த, இந்த ஈனச்செயலை வாழ்க்கையில் மறக்க முடியாதபடி செய்தவர்கள் மீது துரிதமாக நடவடிக்கை எடுத்து சம்பந்தபட்ட வீடியோக்களை அரசு தலையிட்டு நீக்கியதற்காக தமிழக அரசுக்கு என்னுடைய மனமார்ந்த பாராட்டுகள். இனிமேலாவது மதத்துவேசமும், கடவுள் நிந்தனையும் ஒழியட்டும்...ஒழியனும் எல்லா மதமும் சம்மதமே!! கந்தனுக்கு அரோகரா!! என நடிகர் ரஜினிகாந்த் டுவிட்டரில் பதிவிட்டுருந்தார்.
இந்தநிலையில் அரசின் நடவடிக்கையை பாராட்டிய நடிகர் ரஜினிக்கு அமைச்சர் எஸ்.பிவேலுமணி நன்றி தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் தனது டுவிட்டர் பதிவில்,
உடனடியாக நடவடிக்கை எடுத்தமைக்கு பாராட்டு தெரிவித்து பாகுபாடு இல்லா சமய நல்லிணக்கத்திற்கு குரல் கொடுத்துள்ள திரு. ரஜினிகாந்த் அவர்களுக்கு என்னுடைய மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
அவ்வகையில் கவசமாக இருந்து காக்க என்று கந்தர் அருள்வேண்டி கோடிக்கணக்கான தமிழர்கள் பாடும் பாடலை நிந்தனை செய்தோர் மீதும் மத நல்லிணக்கத்திற்கு ஊறு விளைவிக்க முயன்றோர் மீதும் மாண்புமிகு முதல்வர் எடப்பாடியார் அவர்களின் தலைமையிலான அரசு.
மாண்புமிகு தமிழக முதல்வர் எடப்பாடியார் தலைமையிலான தமிழக அரசு சமய நல்லிணக்கத்தை சீர்குலைக்கும் வகையில் செயல்படும் யாராயினும் அரசியல் செய்யாமல் உடனடியாக கடும் நடவடிக்கை எடுத்து சட்டம் ஒழுங்கு அமைதியை நிலைநாட்டி வருகிறது என பதிவிட்டுள்ளார்.

Related Tags :
Next Story