தஞ்சை மாவட்டம் பேராவூரணி அதிமுக எம்எல்ஏ கோவிந்தராசுவுக்கு கொரோனா தொற்று உறுதி
தஞ்சை மாவட்டம் பேராவூரணி அதிமுக எம்எல்ஏ கோவிந்தராசுவுக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
தஞ்சாவூர்,
தமிழகத்தில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கையும் கொரோனாவால் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கையும் நாளுக்குள் நாள் புதிய உச்சத்தை தொட்டே வருகிறது. இதில் கொரோனா தடுப்பு மற்றும் நிவாரண பணிகளில் ஈடுபட்டுள்ள எம்.எல்.ஏ.க்கள் மற்றும் அமைச்சர்களும் நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.
இந்த நிலையில், தஞ்சை மாவட்டம் பேராவூரணி அதிமுக எம்எல்ஏ கோவிந்தராசுவுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.கொரோனா தொற்று உறுதியானதையடுத்து அதிமுக எம்எல்ஏ கோவிந்தராசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட உள்ளார்.
இதைத்தொடர்ந்து கொரோனாவால் பாதிக்கப்பட்ட எம்.எல்.ஏ.க்களின் எண்ணிக்கை 18 ஆக உயர்ந்து இருக்கிறது.
Related Tags :
Next Story