தி.மு.க. இந்துக்களுக்கு எதிரான கட்சி ரஜினிகாந்த் தமிழகத்தின் முதல்-அமைச்சராக வருவார் நடிகர் எஸ்.வி.சேகர்


தி.மு.க. இந்துக்களுக்கு எதிரான கட்சி ரஜினிகாந்த் தமிழகத்தின் முதல்-அமைச்சராக வருவார் நடிகர் எஸ்.வி.சேகர்
x
தினத்தந்தி 24 July 2020 1:45 AM IST (Updated: 24 July 2020 1:45 AM IST)
t-max-icont-min-icon

தி.மு.க. இந்துக்களுக்கு எதிரான கட்சி ரஜினிகாந்த் தமிழகத்தின் முதல்-அமைச்சராக வருவார் என நடிகர் எஸ்.வி.சேகர் கூறினார்.

சென்னை,

நடிகர் எஸ்.வி.சேகர் சென்னையில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் பங்குபெற்ற பின்பு, நிருபர்களிடம் கூறியதாவது:-

நடிகர் ரஜினிகாந்த் கட்சி ஆரம்பித்தால், அவர் தான் தமிழகத்தின் முதல்-அமைச்சராக வருவார். த.மா.கா. கட்சி ஆரம்பித்த 15 நாட்களில் வெற்றி பெறவில்லையா?. ரஜினிகாந்துக்கு 10 நாட்கள் போதும்.

தி.மு.க. இந்து மக்களுக்கு எதிரான கட்சி. ராமர் எந்த கல்லூரியில் படித்தார்? ராமர் என்ன என்ஜினீயரா? என்று எந்த கட்சியை சேர்ந்தவர்கள் கேட்டார்கள்.

பா.ஜ.க.வில் எனக்கு பதவி கொடுக்காததால் எனக்கு கவலையில்லை. என்னை தமிழக பா.ஜ.க. பயன்படுத்திக்கொண்டால் கட்சிக்கு நல்லது. பயன்படுத்திக்கொள்ளாவிட்டால் எனக்கு நஷ்டம் இல்லை. மோடி தான் 2024-ம் ஆண்டிலும் பிரதமராக வருவார். எனக்கு அதுபோதும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story