வெளிநாடுகளில் இருந்து 5 சிறப்பு விமானங்களில் 873 பேர் சென்னை வந்தனர்


வெளிநாடுகளில் இருந்து 5 சிறப்பு விமானங்களில் 873 பேர் சென்னை வந்தனர்
x
தினத்தந்தி 24 July 2020 2:00 AM GMT (Updated: 24 July 2020 2:00 AM GMT)

வெளிநாடுகளில் இருந்து 5 சிறப்பு விமானங்களில் 873 பேர் சென்னை வந்தனர்.

சென்னை,

கொரோனா வைரஸ் தொற்று காரணமாக பல்வேறு நாடுகளில் சிக்கி தவித்த இந்தியர்கள் மத்திய அரசின் வந்தே பாரத் திட்டத்தின் மூலம் அழைத்து வரப்படுகின்றனர். அதன்படி தமிழகத்தில் மட்டும் 39 ஆயிரத்துக்கும் அதிகமானவர்கள் அழைத்து வரப்பட்டு உள்ளனர்.

இந்த நிலையில் மஸ்கட்டில் சிக்கி தவித்த 14 பெண்கள் உள்பட 183 பேர்களுடனும், கத்தாரில் இருந்து 10 குழந்தைகள், 63 பெண்கள் உள்பட 177 பேர்களுடனும், குவைத்தில் இருந்து 6 குழந்தைகள், 14 பெண்கள் உள்பட 173 பேர்களுடனும், சார்ஜாவில் இருந்து 2 விமானங்களில் 17 குழந்தைகள், 82 பெண்கள் உள்பட 340 பேர்களுடனும் என 5 சிறப்பு விமானங்கள் சென்னை வந்தன.

இதில் வந்த 873 பேருக்கு சென்னை விமான நிலையத்தில் குடியுரிமை மற்றும் சுங்க இலாகா அதிகாரிகள் சோதனை முடிந்ததும், அங்கேயே தமிழக பொது சுகாதார துறை சார்பில் கொரோனா பரிசோதனைக்காக சளி மற்றும் ரத்த மாதிரிகள் சேகரிக்கப்பட்டன. பின்னர் அனைவரும் அரசு பஸ்களில் சென்னையில் உள்ள கல்லூரி மற்றும் ஓட்டல்களில் தனிமைப்படுத்துதல் முகாமுக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். இதில் 3 பேர் புதுச்சேரிக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

Next Story