செங்கல்பட்டு மாவட்டத்தில் இன்று மேலும் 305 பேருக்கு கொரோனா பாதிப்பு
செங்கல்பட்டு மாவட்டத்தில் இன்று மேலும் 305 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
சென்னை
தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்குள் நாள் புதிய உச்சத்தை தொட்டே உயர்ந்து வருகிறது. இதில் சென்னைக்கு அடுத்தப்படியாக செங்கல்ப்பட்டு மாவட்டத்தில் தான் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது.
செங்கல்பட்டு மாவட்டத்தில் நேற்று வரை கொரோனாவால் பாதிப்படைந்தோர் எண்ணிக்கை 10,888 ஆக இருந்தது.
இந்நிலையில் செங்கல்பட்டு மாவட்டத்தில் இன்று காலை நிலவரப்படி கொரோனா தொற்றால் மேலும் 305 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். இதன் மூலம் கொரோனா பாதித்தோர் எண்ணிக்கை 11,193-ஆக உயர்ந்துள்ளது. மேலும் இதுவரை 214 பேர் உயிரிழந்துள்ளனர் மற்றும் 2,688 பேர் சிகிச்சை பெற்று வருகினறனர்.
Related Tags :
Next Story