தமிழகத்தில் தினம் தினம் புதிய உச்சம்; ஒரே நாளில் 6,785 பேருக்கு கொரோனா தொற்று
தமிழகத்தில் இதுவரை இல்லாத அளவுக்கு இன்று ஒரே நாளில் 6,785 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
சென்னை,
தமிழகத்தில் கொரோனா தொற்று வைரஸ் மின்னல் வேகத்தில் பரவி வருகிறது. கடந்த சில வாரங்களாக தலைநகர் சென்னையில் கொரோனா தொற்று பரவலின் வேகம் சற்று தணிந்துள்ளது. ஆனால், சென்னையை தவிர்த்து பிற மாவட்டங்களில் தொற்றுக்கு ஆளாவோர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்துக்கொண்டே செல்கிறது.

கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகளை மாவட்ட நிர்வாகங்கள் முடுக்கி விட்டுள்ளன. எனினும், கொரோனா பரவல் குறைந்தபாடில்லை. கொரோனா பாதிப்பு தினம் தினம் புதிய உச்சத்தை எட்டி வருவது மக்கள் மத்தியில் பீதியை ஏற்படுத்தியுள்ளது.
சுகாதாரத்துறை அமைச்சகம் இன்று வெளியிட்ட தகவலின் படி, தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 6,785 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் இதுவரை கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டவர்கள் எண்ணிக்கை 1,99,749-ஆக உள்ளது. கொரோனா பாதிப்பால் இன்று ஒரு நாளில் 88 பேர் உயிரிழந்துள்ளனர். இதுவரை கொரோனா தொற்றால் தமிழகத்தில் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 3,320 ஆக உள்ளது.
சென்னையில் இன்று ஒருநாளில் 1,299 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. ஆறுதல் அளிக்கும் விஷயமாக இதுவரை இல்லாத அளவுக்கு இன்று ஒரே நாளில் 6504 பேர் கொரோனா தொற்றில் இருந்து குணம் அடைந்துள்ளனர். தமிழகத்தில் இன்று 63,182 பேருக்கு கொரோனா பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளது.

Related Tags :
Next Story