எம்ஜிஆர் சிலைக்கு சிலர் காவி துண்டு - திமுக எம்.பி.,கனிமொழி கருத்து


எம்ஜிஆர் சிலைக்கு சிலர் காவி துண்டு - திமுக எம்.பி.,கனிமொழி கருத்து
x
தினத்தந்தி 25 July 2020 9:09 AM IST (Updated: 25 July 2020 9:09 AM IST)
t-max-icont-min-icon

புதுச்சேரியில் எம்ஜிஆர் சிலைக்கு சிலர் காவி துண்டு விவகாரம் தொடர்பாக திமுக எம்.பி.,கனிமொழி கருத்து தெரிவித்துள்ளார்.

சென்னை,

தமிழகத்தின் பல்வேறு இடங்களில் பெரியார் சிலைகள் அவமானப்படுத்தப்பட்டபோது முதலமைச்சர் நடவடிக்கை எடுக்காததால், புதுச்சேரியில் எம்ஜிஆர் சிலைக்கு சிலர் காவி துண்டு போட்டுள்ளதாக திமுக எம்பி கனிமொழி கூறி இருக்கிறார்.

புதுச்சேரியில் எம்.ஜி.ஆர் சிலைக்கு காவி துண்டு போட்ட சம்பவத்தை தமிழக முதலமைச்சர் கடுமையாக கண்டிக்கவேண்டிய செயல் என்பதில் மாற்றுக்கருத்தும் இல்லை என்றும் ஆனால் தமிழகத்தின் பல இடங்களில் பெரியார் சிலைகள் அவமானப்படுத்தப்பட்டபோது கடும் நடவடிக்கை எடுக்காமல் போனதன் விளைவே இது என்பதையும் முதலமைச்சர் புரிந்து கொள்ளட்டும் என தமது டுவிட்டர் பக்கத்தில் கூறியுள்ளார்.



Next Story