பவானிசாகர் அணை நீர்மட்டம் நிலவரம்
பவானிசாகர் அணை நீர்மட்டம் 84.77 அடியாக உள்ளது.
பவானி,
ஈரோடு மாவட்டத்தின் முக்கிய நீராதாரமாக பவானிசாகர் அணை உள்ளது. இந்த அணையின் மொத்த நீர்மட்ட உயரம் 105 அடி ஆகும். அணையின் நீர்பிடிப்பு பகுதியாக நீலகிரி மலைப்பகுதி உள்ளது.
இந்த நிலையில் இன்று காலை நிலவரப்படி அணையின் நீர்மட்டம் 84.77 அடியாக உள்ளது. அணைக்கு வினாடிக்கு 619 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. நீர் இருப்பு 18.3 டிஎம்சி யாக உள்ளது. மேலும் அணையில் இருந்து வினாடிக்கு 200 கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது.
தொடர்ந்து நீலகிரி மலைப்பகுதியில் பெய்து வரும் மழை காரணமாக நீர்வரத்து அதிகரித்து, அணையின் நீர்மட்டம் படிப்படியாக உயரும் என்று விவசாயிகள் எதிர்பார்க்கின்றனர்.
Related Tags :
Next Story