வேலூர் மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 5,000 ஐ கடந்தது


வேலூர் மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 5,000 ஐ கடந்தது
x
தினத்தந்தி 26 July 2020 9:37 AM IST (Updated: 26 July 2020 9:37 AM IST)
t-max-icont-min-icon

வேலூர் மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 5,000 ஐ கடந்துள்ளது.

சென்னை,

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு தினம் தினம் அதிகரித்து வருகிறது. முதலில் சென்னையில் தான் கொரோனா பாதிப்பு அதிகமாக இருந்தது. தற்போது பிற மாவட்டங்களிலும் கட்டுக்குள் இருந்த கொரோனா மீண்டும் வீரியம் பெற்று நாளுக்குள் நாள் புதிய உச்சத்தை தொட்டே உயர்ந்து வருகிறது.

இந்நிலையில் இன்று காலை நிலவரப்படி வேலூர் மாவட்டத்தில் மேலும் 204 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் கொரோனா பாதிப்பு மொத்த  எண்ணிக்கை 5,156 ஆக உயர்ந்துள்ளது.

மாவட்டத்தில் இதுவரை 3,973 பேர் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதுவரை 1,143 பேர் சிகிச்சையில் உள்ளனர். இதனால் வேலூர் மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 5,000 ஐ கடந்துள்ளது.

Next Story