சென்னையில் மேலும் 20 பேர் கொரோனாவுக்கு பலி


சென்னையில் மேலும் 20 பேர் கொரோனாவுக்கு பலி
x
தினத்தந்தி 26 July 2020 1:39 PM IST (Updated: 26 July 2020 1:39 PM IST)
t-max-icont-min-icon

சென்னையில், மேலும் 20 பேர் கொரோனாவுக்கு உயிரிழந்தனர்.

சென்னை,

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு தினம் தினம் அதிகரித்து வருகிறது. முதலில் சென்னையில் தான் கொரோனா பாதிப்பு அதிகரித்து இருந்தது அதையடுத்து அங்கு கொரோனா பாதிப்பு குறைந்து வருகிறது. தற்போது பிற மாவட்டங்களில் கட்டுக்குள் இருந்த கொரோனா மீண்டும் வீரியம் பெற்று நாளுக்குள் நாள் புதிய உச்சத்தை தொட்டே உயர்ந்து வருகிறது. இதுவரை இல்லாத அளவுக்கு 6,988 பேர் நேற்று பாதிக்கப்பட்டனர். இதையடுத்து கொரோனா பாதிப்பு 2 லட்சத்தை தாண்டியது.

இந்நிலையில்  சென்னையில் மொத்தம் உள்ள 15 மண்டலங்களில் கொரோனா சிகிச்சை பெற்று வருவோர், குணமடைந்தவர்கள் மற்றும் இறந்தவர்கள் விவரத்தை சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ளது.

சென்னையில் இதுவரை 93,537 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை 1,989 பேர் உயிரிழந்துள்ளனர். 77,625 பேர் குணமடைந்த நிலையில், தற்போது 13,923 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

சென்னையில், இன்று ஒரே நாளில் 20 பேர் கொரோனாவுக்கு உயிரிழந்தனர். சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் 8 பேர், சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் 4 பேர், கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் 3 பேர், ஆயிரம் விளக்கு தனியார் மருத்துவமனையில் 2 பேர், நந்தம்பாக்கம், அடையாறு, சேத்துப்பட்டு ஆகிய பகுதிகளில் உள்ள தனியார் மருத்துவமனைகளில் தலா ஒருவர் என மொத்தம் 20 பேர் சிகிச்சை பலனின்றி இறந்துள்ளனர்.

தற்போது ராயபுரம் மண்டலத்தில் 941 பேரும் தண்டையார்பேட்டை மண்டலத்தில் 605 பேரும், தேனாம்பேட்டை மண்டலத்தில் 1,143 பேரும், கோடம்பாக்கத்தில் 2,291 பேரும், அண்ணா நகரில் 1,727 பேரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Next Story