பா.ஜனதா கட்சியின் மூத்த தலைவர் இல.கணேசனுக்கு கொரோனா


பா.ஜனதா கட்சியின் மூத்த தலைவர் இல.கணேசனுக்கு கொரோனா
x
தினத்தந்தி 1 Sept 2020 12:53 AM IST (Updated: 1 Sept 2020 12:53 AM IST)
t-max-icont-min-icon

இல.கணேசனுக்கு கடந்த சில நாட்களுக்கு முன்னர், சளி உள்ளிட்ட கொரோனா அறிகுறிகளால் பாதிக்கப்பட்டார்.

சென்னை

தமிழக பா.ஜனதா கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான இல.கணேசனுக்கு கடந்த சில நாட்களுக்கு முன்னர், சளி உள்ளிட்ட கொரோனா அறிகுறிகளால் பாதிக்கப்பட்டார். இதையடுத்து அவரது உறவினர்கள், சென்னையில் உள்ள சிம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சைக்கு அழைத்து சென்றனர். அங்கு அவருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. இந்த பரிசோதனையின் முடிவில் இல.கணேசனுக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதுகுறித்து அந்த மருத்துவமனை டாக்டர் ஒருவர் கூறியதாவது:-

கொரோனா அறிகுறிகளுடன் மருத்துவமனைக்கு வந்த பா.ஜ.க. மூத்த தலைவர் இல.கணேசனுக்கு சளி மற்றும் ரத்த பரிசோதனை செய்யப்பட்டது. இந்த பரிசோதனை முடிவில் அவருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது தெரியவந்துள்ளது. இதையடுத்து, அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவருடன் தொடர்பில் இருந்த அனைவரும் தனிமைப்படுத்திக்கொள்ள அறிவுரை வழங்கப்பட்டுள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story