முன்னாள் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி மறைவு: தமிழக அரசு 7 நாட்கள் துக்கம் அனுசரிப்பு


முன்னாள் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி மறைவு: தமிழக அரசு 7 நாட்கள் துக்கம் அனுசரிப்பு
x
தினத்தந்தி 1 Sept 2020 2:25 AM IST (Updated: 1 Sept 2020 2:25 AM IST)
t-max-icont-min-icon

முன்னாள் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி மறைவையொட்டி தமிழக அரசு 7 நாட்கள் துக்கம் அனுசரிக்கப்படும் என்று தெரிவிக்கபப்பட்டுள்ளது.

சென்னை, செப்.1-

தமிழக அரசின் பொதுத்துறை அனைத்து மாவட்ட கலெக்டர்கள், போலீஸ் அதிகாரிகளுக்கு அனுப்பிய கடிதத்தில் கூறப்பட்டு இருப்பதாவது:-

மறைந்த முன்னாள் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜிக்கு மரியாதை செலுத்தும் விதமாக 31-ந் தேதியில் இருந்து இம்மாதம் 6-ந் தேதி வரை (7 நாட்கள்) மாநிலங்கள் துக்கம் அனுசரிக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது.

அதன்படி, இந்த 7 நாட்களிலும் தமிழகத்தில் தேசிய கொடி அரைக்கம்பத்தில் பறக்கவிடப்படும். அரசு நிகழ்ச்சிகள் நடத்தப்படாது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Next Story