“அமைச்சர்கள் எல்லை மீறி பேசுகிறார்கள்” எச்.ராஜா பேட்டி
“அமைச்சர்கள் எல்லை மீறி பேசுகிறார்கள்” என்று எச்.ராஜா கூறினார்.
மதுரை,
பா.ஜ.க. தேசிய செயலாளர் எச்.ராஜா மதுரையில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
நீதிபதி சந்துரு தனது முகநூல் பக்கத்தில் மத்திய நிதி மந்திரியை அவதூறாக விமர்சனம் செய்துள்ளார். இது வருந்தத்தக்க விஷயம். அவர் மன்னிப்பு கேட்க வேண்டும்.
அமைச்சர் செல்லூர் ராஜூ நல்ல நண்பர். ஆனால் தற்போது அமைச்சர்கள் செல்லூர் ராஜூவும், ஜெயக்குமாரும் கூட்டணி பற்றி பேசுவது சரியல்ல. அவர்கள் பேச வேண்டாம். அரசு அதிகாரிகள் தவறு செய்தால் சுட்டிக்காட்டுவது என் பொறுப்பு. தமிழக அரசை நான் விமர்சிப்பது கிடையாது. தோழமை உணர்வோடு குறைகளை சொன்னால் பரிகாரம் செய்ய வேண்டும். அமைச்சர்கள் சிலர் எல்லை மீறி பேசுகிறார்கள். இது கூட்டணிக்குள் பிரச்சினைகளை ஏற்படுத்தும்.
6 ஆண்டுகள் பிரதமர் மோடி செயல்படுத்திய திட்டங்களால் ஏராளமான மக்கள் பயன் பெற்றுள்ளனர். பயனாளிகளை வாக்காளர்களாக மாற்றுவதற்கான பணிகள் நடைபெறுகிறது. பா.ஜ.க. இல்லாமல் யாரும் ஆட்சியமைக்க முடியாது என்ற நிலையை கொண்டு வருவது போல தமிழகத்தில் தேர்தல் தயாரிப்புகள் இருக்கும்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Related Tags :
Next Story