அரசு உத்தரவிட்டதும் ஆம்னி பஸ்களை இயக்க தயார் - பஸ் உரிமையாளர்கள் சங்கம் அறிவிப்பு
அரசு உத்தரவிட்டதும் ஆம்னி பஸ்களை இயக்க தயார் என்று பஸ் உரிமையாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது.
சென்னை,
தமிழகத்தில் இன்று (செவ்வாய்க்கிழமை) முதல் மாவட்டத்துக்குள் அரசு மற்றும் தனியார் பஸ்கள் இயக்கப்படுவதற்கு அரசு அனுமதி அளித்துள்ளது. இந்தநிலையில் அரசு அனுமதி கிடைத்தால் ஆம்னி பஸ்களை இயக்குவதற்கு தயாராக இருப்பதாக பஸ் உரிமையாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது.
இதுகுறித்து ஆம்னி பஸ் உரிமையாளர்கள் சங்கத் தலைவர் அன்பழகன் கூறியதாவது:-
தற்போதைய சூழ்நிலையில் குறைவான பயணிகளுடன் பஸ்களை இயக்க அரசு அனுமதி அளித்துள்ளது. ஆம்னி பஸ்களுக்கு தடை தொடருகிறது. அரசின் உத்தரவை நாங்கள் மதிக்கிறோம். அதேவேளை ஆம்னி பஸ் உரிமையாளர்கள் மீது அரசு கருணை காட்டவேண்டும். இ-பாஸ் ரத்து செய்த நடவடிக்கை வரவேற்கத்தக்கது.
எனவே விரைவில் தமிழகத்திலும் இயல்பான போக்குவரத்துக்கு அரசு அனுமதி அளிக்கவேண்டும். அரசு உரிய உத்தரவை பிறப்பித்தால் ஆம்னி பஸ்களை இயக்குவதற்கு நாங்கள் தயாராக இருக்கிறோம். அரசு அறிவித்துள்ள பாதுகாப்பு வழிமுறைகளை கையாளவும் உரிமையாளர்கள் நாங்கள் தயாராக உள்ளோம். எனவே தமிழகத்தில் விரைவில் ஆம்னி பஸ்கள் இயக்குவதற்கு அரசு உத்தரவிடவேண்டும் என வேண்டுகிறோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
Related Tags :
Next Story