பெட்ரோல் விலை லிட்டருக்கு 4 காசுகள் உயர்வு
சென்னையில் பெட்ரோல் விலை லிட்டருக்கு 4 காசுகள் உயர்ந்து ஒரு லிட்டர் ரூ.85.04 -க்கு விற்பனையாகிறது.
சென்னை,
சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலைக்கேற்ப இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் நிர்ணயித்துக்கொள்கின்றன. அந்த வகையில், பெட்ரோல், டீசல் விலை தினந்தோறும் நிர்ணயிக்கும் நடைமுறை எண்ணெய் நிறுவனங்களால் கடைபிடிக்கப்பட்டு வருகிறது.
கடந்த மார்ச் மாதம் கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இதனால் தொடக்கத்தில் பெட்ரோல், டீசல் விலை மாற்றமின்றி காணப்பட்டது. ஆனால் ஜூன், ஜூலை மாதங்களில் விலை படிப்படியாக உயரத் தொடகியது. அதன்பிறகு, பெட்ரோல், டீசல் விலைகளில் அவ்வப்போது மாற்றம் செய்யப்பட்டு வருகின்றன.
இந்த நிலையில், சென்னையில் இன்று பெட்ரோல் லிட்டருக்கு 4 காசுகள் அதிகரித்து, 85.04 ரூபாய்க்கு விற்பனையாகிறது. டீசல் விலையில் மாற்றம் செய்யப்படவில்லை.டீசல் ஒரு லிட்டர் ரூ.78.86-க்கு விற்பனையாகிறது.
Related Tags :
Next Story