சென்னை போலீசில் 16 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று


சென்னை போலீசில் 16 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று
x
தினத்தந்தி 2 Sept 2020 2:45 AM IST (Updated: 2 Sept 2020 2:27 AM IST)
t-max-icont-min-icon

சென்னை போலீசில் 16 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

சென்னை,

சென்னை போலீசில் நேற்று 16 பேர் புதிதாக கொரோனாவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனைகளில் சிகிச்சைக்கு சேர்ந்தனர். இதன் மூலம் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 2,257 ஆக உயர்ந்தது.

இது ஒரு பக்கம் இருந்தாலும், தீவிர சிகிச்சை பலனாக நேற்று ஒரே நாளில் 22 போலீசார் கொரோனாவில் இருந்து பூரண குணம் அடைந்து பணிக்கு திரும்பினார்கள். இதுவரை சென்னை போலீசில் கொரோனா பாதிப்புக்குள்ளாகி 1,842 பேர் குணம் அடைந்து பணிக்கு திரும்பி உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Next Story