கள்ளக்குறிச்சியில் கிசான் திட்டம் முறைகேடு: 4 பேர் கைது


கள்ளக்குறிச்சியில் கிசான் திட்டம் முறைகேடு: 4 பேர் கைது
x
தினத்தந்தி 2 Sep 2020 5:25 AM GMT (Updated: 2 Sep 2020 5:59 AM GMT)

பிரதமரின் விவசாய நிதி உதவி திட்ட முறைகேடு தொடர்பாக கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கள்ளக்குறிச்சி,

கள்ளக்குறிச்சி உளுந்தூர்பேட்டையில் விவசாயிகள் திட்டத்தில் முறைகேட்டில் ஈடுபட்ட 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். வேளாண் இணை இயக்குநர் வேலாயுதம் அளித்த புகாரின் பேரில் 4 ஒப்பந்த ஊழியர்களை
சிபிசிஐடி போலீசார் கைது செய்தனர். 

விவசாயிகளுக்கான பிரதம மந்திரியின் கிசான் சம்மன் நிதி உதவி திட்ட முறைகேடு புகாரில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ஒப்பந்த ஊழியர்களான கண்ணப்பன், ஏழுமலை, வீரன்  மணிமேகலையை சிபிசிஐடி போலீசார் கைது செய்தனர்.

கிசான் திட்ட முறைகேடு தொடர்பாக விவசாயிகள் அல்லாத 37 ஆயிரம் பேரின் வங்கிக் கணக்குகள் முடக்கப்பட்டுள்ளது.  போலி பயனாளிகளின் வங்கிக் கணக்கிலிருந்து 4 கோடி ரூபாய் பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. 

கடலூர், கள்ளக்குறிச்சி, விழுப்புரம், வேலூர்,திருப்பத்தூர் உள்ளிட்ட 13 மாவட்டங்களில் சிபிசிஐடி வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

Next Story