மாநில செய்திகள்

பெண் தீக்குளித்த விவகாரம் - காப்பாற்ற முயற்சிக்காமல் வீடியோ எடுத்தவர் கைது + "||" + Woman fire affair

பெண் தீக்குளித்த விவகாரம் - காப்பாற்ற முயற்சிக்காமல் வீடியோ எடுத்தவர் கைது

பெண் தீக்குளித்த விவகாரம் - காப்பாற்ற முயற்சிக்காமல் வீடியோ எடுத்தவர் கைது
பெண் தீக்குளித்த விவகாரத்தில், காப்பாற்ற முயற்சிக்காமல் வீடியோ எடுத்த நபரை போலீசார் கைது செய்தனர்.
கொடைக்கானல்,

கொடைக்கானலில் பெண் தீக்குளித்து தற்கொலையான விவகாரத்தில், காப்பாற்ற‌ாமல் வீடியோ எடுத்த‌ மேலும் ஒருவர் கைது செய்யப்பட்டு உள்ளார். கணவனை பிரிந்த 32 வயது மாலதியும், கே.சி. பட்டியைச் சேர்ந்த சதீசும் காதல் ஜோடிகளாக வாழ்ந்துள்ளனர். இதனிடையே, சதீஷ்க்கு வேறொரு பெண்ணுடன் திருமணம் நடைபெற்றுள்ளது. 


தன்னோடு வாழ்ந்துவிட்டு வேறொரு பெண்ணை மணந்தது குறித்து நியாயம் கேட்க சென்ற மாலதியை, அங்கிருந்தவர்கள் அலட்சியமாக பேசி விரட்டியதாக கூறப்படுகிறது. இதனால், மனம் உடைந்த மாலதி, சதீஷின் வீட்டு வாசலில் தீக்குளித்தார்.

இதில், ஏற்கனவே ஒருவரை கைது செய்த நிலையில், காப்பாற்ற முயற்சிக்காமல் வீடியோ எடுத்த ச‌ர‌வ‌ண‌குமார் என்ப‌வ‌ரையும் கைது செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.