வரும் 7ம் தேதி முதல் மாவட்டங்களுக்கு இடையேயான பேருந்து சேவைக்கு தமிழக அரசு அனுமதி


வரும் 7ம் தேதி முதல் மாவட்டங்களுக்கு இடையேயான பேருந்து சேவைக்கு தமிழக அரசு அனுமதி
x
தினத்தந்தி 2 Sep 2020 8:27 AM GMT (Updated: 2020-09-02T13:57:45+05:30)

வரும் 7ம் தேதி முதல் மாவட்டங்களுக்கு இடையேயான பேருந்து போக்குவரத்துக்கு தமிழக அரசு அனுமதி வழங்கி உள்ளது.

சென்னை,

தமிழகம் முழுவதும் மாவட்டங்களுக்கு இடையே பேருந்து சேவை செயல்பட முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். தற்போது மாவட்டங்களுக்குள் மட்டுமே பேருந்துகள் இயக்கப்படும் நிலையில் புதிய அறிவிப்பு வெளியாகி உள்ளது.

* தமிழகத்திற்குள் செப்டம்பர் 7-ம் தேதி முதல் பயணிகள் ரெயில் சேவை செயல்பட அனுமதி

 * செப்டம்பர் 7-ம் தேதி முதல் மாவட்டங்களுக்கு இடையேயான அரசு. தனியார் போக்குவரத்திற்கு அனுமதி

*  தமிழகத்தில் மாவட்டங்களுக்கு இடையே அரசு, தனியார் பஸ் சேவை செப்டம்பர் 7- ம்தேதி முதல் இயக்கப்படும்.

ஏற்கனவே மாவட்டங்களுக்கு அரசு பேருந்து சேவை நேற்று தொடங்கிய நிலையில் புதிய அறிவிப்பு வெளியாகி உள்ளது.


Next Story