கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை பின்பற்றாத தனி நபர்கள் - நிறுவனங்களுக்கு அபராதம் புதிய சட்டம் - அமைச்சர் விஜயபாஸ்கர்


கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை பின்பற்றாத தனி நபர்கள் - நிறுவனங்களுக்கு அபராதம் புதிய சட்டம் - அமைச்சர் விஜயபாஸ்கர்
x
தினத்தந்தி 2 Sept 2020 5:28 PM IST (Updated: 2 Sept 2020 5:28 PM IST)
t-max-icont-min-icon

கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை பின்பற்றாத தனி நபர்கள் மற்றும் நிறுவனங்களுக்கு அபராதம் விதிக்க வகை செய்யும் புதிய அவசர சட்டத் திருத்தம் விரைவில் கொண்டு வரப்படும் என சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித் துள்ளார்.

சென்னை

சென்னை - தேனாம்பேட்டை டி.எம்.எஸ் வளாகத்தில் உள்ள 108 அவசர கால கட்டுப்பாட்டு மையத்தில் நடை பெற்ற நிகழ்ச்சிக்குப் பின், செய்தியாளர்களிடம் பேசிய அவர் கூறியதாவது:-

கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை பின்பற்றாத தனி நபர்கள் மற்றும் நிறுவனங்களுக்கு அபராதம் விதிக்க வகை செய்யும்புதிய அவசர சட்டத் திருத்தம் விரைவில் கொண்டு வரப்படும். முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, இதற்கான அறிவிப்பை விரைவில் வெளியிடுவார்.

நீட் தேர்வு விவகாரத்தில், சட்ட போராட்டத்துடன் மத்திய அரசுக்கு தமிழக அரசு அழுத்தம் கொடுத்து வருகிறது என கூறினார்.

முன்னதாக அவசர சிகிச்சை ஊர்தி வரலாற்றில் முதல் பெண் ஓட்டுநராக தேர்வான தேனி வீரலட்சுமிக்கு பாராட்டுகளை தெரிவித்து, பணி நியமன ஆணையையும் அமைச்சர் விஜயபாஸ்கர் வழங்கினார்.


Next Story