செப்டம்பர் 2 : தமிழகத்தில் மாவட்டம் வாரியாக கொரோனா பாதிப்பு, குணமானவர்கள், பலியானவர்கள் முழு விவரம்
செப்டம்பர் 2 : தமிழகத்தில் கொரோனா பாதிப்பு, குணமானவர்கள், பலியானவர்கள் மாவட்டம வாரியாக வெளியிடப்பட்டு உள்ளது.
சென்னை:
தமிழகத்தில் இன்று 5,990 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் மொத்த எண்ணிக்கை 4,39,959 ஆக உயர்ந்துள்ளது.
தமிழகத்தில் கொரோனாவில் இருந்து இதுவரை 3,80,063 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இன்று மட்டும் 5,891 பேர் இன்றுகுணமடைந்து உள்ளனர்.
தமிழகத்தில் கொரோனா பாதிபிற்கு 52,380 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். கொரோனாவால் இன்று மட்டும் 98 பேர் உயிரிழந்துள்ளனர். இதில் 41 பேர் தனியார் மருத்துவமனைகளிலும், 57 பேர் அரசு மருத்துவமனைகளிலும் உயிரிழந்துள்ளனர். மொத்த உயிரிழப்பு 7,516 ஆக உயர்ந்துள்ளது.
சென்னையில் இன்று ஒரே நாளில் 1,025 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. சென்னையில் இதுவரை 1,37,732 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 1,22,407 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 12,537 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இன்று 19 பேர் கொரோனாவினால் உயிரிழந்துள்ளனர். சென்னையில் மொத்த உயிரிழப்பு 2,788 ஆக உள்ளது.
தமிழகத்தில் மொத்தம் 154 மையங்களில் கொரோனா பரிசோதனை செய்யப்படுகிறது. 64 அரசு மருத்துவமனைகளிலும், 90 தனியார் மருத்துவமனைகளிலும் பரிசோதனை நடத்தப்படுகிறது.
தமிழகத்தில் இதுவரை 49,64,141 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. இன்று ஒரே நாளில் மட்டும் 75,829 கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.
பிற மாநிலங்களில் இருந்து இன்று தமிழகத்திற்கு வந்த 26 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
தமிழகத்தில் இதுவரை ஆண்கள் 2,65,688 பேரும், பெண்கள் 1,74,242 பேரும், மூன்றாம் பாலினத்தவர் 29 பேரும் கொரோனா பாதிப்பிற்கு ஆளாகியுள்ளனர்.
தமிழகத்தில் 12 வயதிற்குள் 20,131 பேரும், 13 வயதிலிருந்து 60 வயதிற்குள் 3,62,522 பேரும், 60 வயதிற்கு மேல் 57,306 பேரும் கொரோனாவினால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
பெரம்பலூர் மாவட்டத்தில் கொரோனாவுக்கு சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 107 ஆக குறைந்தது! தமிழகத்திலேயே குறைந்த அளவாக பெரம்பலூரில் இன்று 10 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டு உள்ளது.
செப்டம்பர் 2 : தமிழகத்தில் கொரோனா பாதிப்பு, குணமானவர்கள், பலியானவர்கள் மாவட்டம வாரியாக வெளியிடப்பட்டு உள்ளது. அதன் விவரம் வருமாறு:-
மாவட்டம் | செப். 2 பாதிப்பு | மொ.பாதிப்பு | குணமானவர்கள் | சிகிச்சையில் | மொ.இறப்பு |
அரியலூர் | 43 | 2,862 | 2,418 | 413 | 31 |
செங்கல்பட்டு | 390 | 26,907 | 23,680 | 2,788 | 439 |
சென்னை | 1,025 | 1,37,732 | 1,22,407 | 12,537 | 2,788 |
கோயம்புத்தூர் | 579 | 16,662 | 12,078 | 4,269 | 315 |
கடலூர் | 405 | 12,145 | 9,036 | 2,981 | 128 |
தருமபுரி | 54 | 1,309 | 1,128 | 168 | 13 |
திண்டுக்கல் | 136 | 6,802 | 5,783 | 890 | 129 |
ஈரோடு | 106 | 3,359 | 2,185 | 1,130 | 44 |
கள்ளக்குறிச்சி | 54 | 6,343 | 5,393 | 871 | 79 |
காஞ்சிபுரம் | 133 | 17,663 | 15,648 | 1,759 | 256 |
கன்னியாகுமரி | 111 | 9,821 | 8,635 | 1,001 | 185 |
கரூர் | 64 | 1,682 | 1,224 | 432 | 26 |
கிருஷ்ணகிரி | 49 | 2,236 | 1,798 | 406 | 32 |
மதுரை | 123 | 14,386 | 13,222 | 804 | 360 |
நாகப்பட்டினம் | 71 | 2,845 | 1,977 | 823 | 45 |
நாமக்கல் | 83 | 2,298 | 1,624 | 635 | 39 |
நீலகிரி | 14 | 1,667 | 1,339 | 317 | 11 |
பெரம்பலூர் | 10 | 1,347 | 1,223 | 107 | 17 |
புதுகோட்டை | 76 | 6,245 | 5,017 | 1,126 | 102 |
ராமநாதபுரம் | 57 | 4,815 | 4,315 | 393 | 107 |
ராணிப்பேட்டை | 98 | 10,796 | 9,804 | 867 | 125 |
சேலம் | 403 | 11,826 | 7,942 | 3,724 | 160 |
சிவகங்கை | 25 | 4,114 | 3,756 | 249 | 109 |
தென்காசி | 82 | 5,547 | 4,701 | 742 | 104 |
தஞ்சாவூர் | 147 | 6,886 | 5,785 | 984 | 117 |
தேனி | 95 | 12,827 | 11,428 | 1,252 | 147 |
திருப்பத்தூர் | 94 | 3,000 | 2,468 | 469 | 63 |
திருவள்ளூர் | 285 | 25,330 | 23,443 | 1,474 | 413 |
திருவண்ணாமலை | 213 | 10,825 | 9,339 | 1,317 | 169 |
திருவாரூர் | 133 | 3,819 | 2,997 | 775 | 47 |
தூத்துக்குடி | 57 | 11,532 | 10,577 | 841 | 114 |
திருநெல்வேலி | 110 | 9,796 | 8,386 | 1,232 | 178 |
திருப்பூர் | 87 | 2,904 | 1,941 | 894 | 69 |
திருச்சி | 120 | 7,684 | 6,664 | 898 | 122 |
வேலூர் | 159 | 11,081 | 9,837 | 1,073 | 171 |
விழுப்புரம் | 224 | 7,821 | 6,515 | 1,236 | 70 |
விருதுநகர் | 62 | 12,842 | 12,250 | 401 | 191 |
விமான நிலையத்தில் தனிமை | 2 | 921 | 893 | 27 | 1 |
உள்நாட்டு விமான நிலையத்தில் தனிமை | 11 | 854 | 781 | 73 | 0 |
ரயில் நிலையத்தில் தனிமை | 0 | 428 | 426 | 2 | 0 |
மொத்த எண்ணிக்கை | 5,990 | 4,39,959 | 3,80,063 | 52,380 | 7,516 |
Related Tags :
Next Story