சென்னையில் இன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரம்


சென்னையில் இன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரம்
x
தினத்தந்தி 3 Sep 2020 2:01 AM GMT (Updated: 3 Sep 2020 2:01 AM GMT)

சென்னையில் இன்று பெட்ரோல் விலை ரூ.85.04-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

சென்னை,

சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலைக்கேற்ப இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் நிர்ணையித்து வருகின்றன. பெட்ரோல், டீசல் விலை தினந்தோறும் நிர்ணயிக்கும் நடைமுறை கடைபிடிக்கப்பட்டு வருகிறது.

இன்று எண்ணெய் நிறுவனங்கள் வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி,

சென்னையில் ஒரு லிட்டர் டீசல் விலை பல நாட்களுக்கு பிறகு 15 காசுகள் குறைந்து ரூ.78.71க்கு விற்பனை செய்யப்படுகிறது.

ஒரு லிட்டர் பெட்ரோல் விலை மாற்றமின்றி ரூ.85.04-க்கு விற்பனை செய்யப்படுகிறது. இந்த விலை உயர்வு இன்று காலை 6 மணி முதல் அமலுக்கு வந்துள்ளது.

Next Story