வரும் 7 ஆம் தேதி முதல் ரெயில் சேவைக்கு அனுமதி - டிக்கெட் முன்பதிவு தொடங்க ஆயத்தம்
தமிழகத்தில் உள்ளூர் ரயில் சேவை வருகிற 7 ஆம் தேதி முதல் தொடங்க உள்ள நிலையில் டிக்கெட் முன்பதிவுக்கான ஆயத்த பணிகள் நடைபெற்று வருகிறது.
சென்னை,
தமிழகத்தில் ஊரடங்கின் 4 ஆம் கட்ட தளர்வுகள் அமல்படுத்தப்பட்டுள்ளன. மக்களின் வாழ்வதாரம் மற்றும் பொருளாதாரம் ஆகியவற்றை கருத்தில் கொண்டு பொது போக்குவரத்து அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இதன்படி, வரும் 7 ஆம் தேதி மாநிலத்திற்குள் ரயில்களை இயக்க தமிழக அரசு அனுமதி கொடுத்துள்ளது.
இதையடுத்து, ரெயில் டிக்கெட் முன்பதிவுக்கான டிக்கெட் முன்பதிவுக்கான ஆயத்த பணிகள் நடைபெற்று வருகிறது. இதற்காக ரெயில்வே ஊழியர்கள் கணிணி பிரிண்டர் உள்ளிட்டவற்றை தயார் செய்து வருகின்றனர்.
கொரோனா ஊரடங்கு காலத்திற்கு முன்பாக, டிக்கெட் முன்பதிவு செய்தவர்களுக்கு, கட்டணத்தை திருப்பித் தரும் பணிகளும் நடைபெற்று வருகிறது. எந்தெந்த ரெயில்கள் இயக்கப்படும் என்று ரயில்வே துறை அறிவிக்காத நிலையில், நாளை முதல் டிக்கெட் முன்பதிவு தொடங்க வாய்ப்புள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
Related Tags :
Next Story