பாடகர் எஸ்.பி.பி. உடல்நிலை குறித்து வரும் திங்கட்கிழமை நல்ல செய்தியை எதிர்பார்க்கலாம்-எஸ்.பி.பி.மகன் சரண்


பாடகர் எஸ்.பி.பி. உடல்நிலை குறித்து வரும் திங்கட்கிழமை நல்ல செய்தியை எதிர்பார்க்கலாம்-எஸ்.பி.பி.மகன் சரண்
x
தினத்தந்தி 3 Sept 2020 4:49 PM IST (Updated: 3 Sept 2020 5:00 PM IST)
t-max-icont-min-icon

பாடகர் எஸ்.பி.பி. உடல்நிலை குறித்து வரும் திங்கட்கிழமை நல்ல செய்தியை எதிர்பார்க்கலாம் என்று அவரது மகன் எஸ்.பி.பி சரண் தெரிவித்துள்ளார்.

சென்னை,

கொரோனாவால் பாதிக்கப்பட்ட பாடகா் எஸ்.பி. பாலசுப்ரமணியம் சென்னையில் உள்ள  தனியார்  மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் தொடா்ந்து சிகிச்சை பெற்று வருகிறாா். 

தற்போது எஸ்.பி.பி.க்கு முழுமையாக நினைவு திரும்பியிருக்கிறது. பிறா் பேசுவதை உணா்ந்து பதிலளிக்கிறாா்.  பிசியோதரபி  சிகிச்சைகளுக்கு நல்ல ஒத்துழைப்பு அளிக்கிறாா் என்று அண்மையில் தனியார் மருத்துவமனை தெரிவித்து இருந்தது.

இந்நிலையில் எஸ்.பி. சரண் இன்று கூறியதாவது: எஸ்.பி.பி.யின் உடல்நிலை  4-வது நாளாக சீராக உள்ளது.  அவரது உடல்நிலை குறித்து வரும் திங்கட்கிழமை நல்ல செய்தியை எதிர்பார்க்கலாம்" என்றார். 

Next Story