மணல் கடத்தல் வழக்குகளில் சிக்குவோருக்கு இனி முன் ஜாமீன் கிடையாது-சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி


மணல் கடத்தல் வழக்குகளில் சிக்குவோருக்கு இனி முன் ஜாமீன் கிடையாது-சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி
x
தினத்தந்தி 3 Sept 2020 5:49 PM IST (Updated: 3 Sept 2020 5:49 PM IST)
t-max-icont-min-icon

மணல் கடத்தல் வழக்குகளில் சிக்குவோருக்கு இனி முன் ஜாமீன் கிடையாது என சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

சென்னை,

மணல் கடத்தல் வழக்குகளில் சிக்குவோருக்கு இனி முன் ஜாமீன் கிடையாது என்று சென்னை உயர்நீதிமன்றம்  தெரிவித்துள்ளது. தமிழகம் முழுவதும், மணல் கடத்தல் வழக்குகளில் முன்ஜாமீன் கோரிய 40 பேரின் மனுக்களையும் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

மணல் கடத்தல்காரர்களால் தான் நிலத்தடி நீர் ஆதாரங்களும் சுற்றுச்சூழலும் கடுமையாக பாதிக்கப்படுகிறது எனவும் முன் ஜாமீன் பெற்று விடலாம் என்ற நம்பிக்கையில் தொடர்ந்து மணல் கடத்தல் நடைபெறுகிறது என்று கூறிய நீதிபதி,   ஒவ்வொரு நாளும் குறைந்தது மணல் கடத்தல் தொடர்பான 15 முன்ஜாமீன் மனுக்கள் விசாரணைக்கு வருகிறது என்றார். 


Next Story