தமிழகத்தில் வரும் 7-ம் தேதி முதல் 9 சிறப்பு ரயில்கள் இயக்கம்; 5ம் தேதி முன்பதிவு தொடங்குகிறது


தமிழகத்தில் வரும் 7-ம் தேதி முதல் 9 சிறப்பு ரயில்கள் இயக்கம்; 5ம் தேதி முன்பதிவு தொடங்குகிறது
x
தினத்தந்தி 3 Sept 2020 11:34 PM IST (Updated: 3 Sept 2020 11:34 PM IST)
t-max-icont-min-icon

தமிழகத்தில் வரும் 7-ம் தேதி முதல் 9 சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் எனவும் அதற்கான முன்பதிவு வரும் 5ம் தேதி தொடங்கும் எனவும் தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

சென்னை,

தமிழகத்தில் ஊரடங்கின் 4 ஆம் கட்ட தளர்வுகள் அமல்படுத்தப்பட்டுள்ளன. மக்களின் வாழ்வதாரம் மற்றும் பொருளாதாரம் ஆகியவற்றை கருத்தில் கொண்டு பொது போக்குவரத்து அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இதன்படி, வரும் 7 ஆம் தேதி மாநிலத்திற்குள் ரயில்களை இயக்க தமிழக அரசு அனுமதி கொடுத்துள்ளது.

இதனை தொடர்ந்து தெற்கு ரெயில்வே நிர்வாகம் சார்பில் இன்று வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பின்படி, தமிழகத்தில் வரும் 7-ம் தேதி முதல் 9 சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. சிறப்பு ரயில்களுக்கான முன்பதிவு வரும் 5ம் தேதி காலை 8 மணிக்கு தொடங்குகிறது.

சென்னை - கோவை இடையே 3 சிறப்பு ரயில்கள், சென்னை - மதுரை இடையே 2 சிறப்பு ரயில்கள், சென்னை - திருச்சி, கோவை - மயிலாடுதுறை, சென்னை - காரைக்குடி மற்றும் சென்னை - தூத்துக்குடி இடையே தினசரி சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

உறுதி செய்யப்பட்ட டிக்கெட்டுகளை கொண்ட பயணிகள் மட்டுமே ரயில் நிலையங்களுக்குள் அனுமதிக்கப்படுவார்கள் என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

Next Story