முதலமைச்சர் பழனிசாமி ஆசிரியர் தின வாழ்த்து


முதலமைச்சர் பழனிசாமி ஆசிரியர் தின வாழ்த்து
x
தினத்தந்தி 4 Sept 2020 9:53 AM IST (Updated: 4 Sept 2020 9:53 AM IST)
t-max-icont-min-icon

‘அரும் பணியாற்றுபவர்களுக்கு உளம்கனிந்த ஆசிரியர் தின நல்வாழ்த்துகள்’ என்று முதலமைச்சர் பழனிசாமி ஆசிரியர் தின வாழ்த்து தெரிவித்துள்ளார்.

சென்னை,

ஆசிரியர்களுக்கு நன்றி செலுத்தும் வகையில், செப்டம்பர் 5ஆம் தேதியை, ஒவ்வொரு ஆண்டும் ஆசிரியர் தினமாக கொண்டாடி வருகிறோம். ஆசிரியப் பணியை புனிதப் பணியாக கருதி, பிற ஆசிரியர்களுக்கு முன் உதாரணமாக விளங்குவோரை சிறப்பிக்கும் வகையில் இந்த தினம் கொண்டாடப்படுகிறது.  நாட்டின் முன்னாள் குடியரசுத் தலைவராக இருந்த ராதாகிருஷ்ணனை கவுரவப்படுத்தும் வகையில், ராதாகிருஷ்ணனின் பிறந்த நாளான செப்டம்பர் 5ஆம் தேதி ஆசிரியர் தினமாகக் கொண்டாடி வருகிறோம். அதாவது கடந்த 1962ஆம் ஆண்டு முதல் கொண்டாடிக் கொண்டிருக்கிறோம்.

இந்நிலையில், ‘அரும் பணியாற்றுபவர்களுக்கு உளம்கனிந்த ஆசிரியர் தின நல்வாழ்த்துகள்’ என்று  முதலமைச்சர் பழனிசாமி ஆசிரியர் தின வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில்,

அரும் பணியாற்றுபவர்களுக்கு உளம்கனிந்த ஆசிரியர் தின நல்வாழ்த்துகள். வருங்காலத் தூண்களான மாணவச் செல்வங்களுக்கு அழிவில்லா கல்விச்செல்வம் தந்து ஒழுக்கம், தன்னம்பிக்கை, விடாமுயற்சியை போதித்து வளமிக்க அறிவுசார் சமுதாயத்தை உருவாக்கும் ஆசிரியர்களுக்கு நல்வாழ்த்துகள் என தெரிவித்துள்ளார்.

Next Story