விரைவுப்பேருந்து முன்பதிவு தொடங்கும் என தமிழக போக்குவரத்துத்துறை அறிவிப்பு
விரைவுப்பேருந்திற்கான முன்பதிவு தொடங்கும் என தமிழக போக்குவரத்துத்துறை அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
சென்னை,
கொரோனா பரவல் காரணமாக கடந்த மார்ச் மாதம் 25-ந் தேதி முதல் நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதனால் பஸ், ரெயில், விமான சேவை உள்ளிட்ட அனைத்து வகையான போக்குவரத்தும் ரத்து செய்யப்பட்டது. அதன்பிறகு மக்களின் வாழ்வாதாரத்தையும், பொருளாதாரத்தையும் கருத்தில் கொண்டு அவ்வப்போது ஊரடங்கு தளர்வுகள் அறிவிக்கப்பட்டன.
தமிழகத்தில் கடந்த 1-ந்தேதி முதல் மாவட்டங்களுக்குள் பஸ் போக்குவரத்து தொடங்கியது. வருகிற 7-ந்தேதி முதல் மாவட்டங்களுக்கு இடையேயான பஸ் போக்குவரத்து தொடங்க இருக்கிறது.
இந்நிலையில், பிற்பகல் 1 மணி முதல் விரைவுப்பேருந்திற்கான முன்பதிவு தொடங்கும் என்று தமிழக போக்குவரத்துத்துறை அறிவித்துள்ளது.
பேருந்து ஒன்றிற்கு 26 பயணிகளுக்கு மட்டுமே முன்பதிவு செய்ய அனுமதிக்கப்படுவர் என்றும், முதல் கட்டமாக 524 பேருந்துகளை இயக்க முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

Related Tags :
Next Story