அரியர்ஸ் தேர்ச்சியை ஏற்க மறுப்பா? ஏழு லட்சம் பொறியியல் மாணவர்களுக்கு அதிர்ச்சி தகவல்


அரியர்ஸ் தேர்ச்சியை ஏற்க மறுப்பா?  ஏழு லட்சம் பொறியியல் மாணவர்களுக்கு அதிர்ச்சி தகவல்
x
தினத்தந்தி 4 Sept 2020 2:32 PM IST (Updated: 4 Sept 2020 2:41 PM IST)
t-max-icont-min-icon

பொறியியல் படிப்பில் அரியர்ஸ் மாணவர்கள் தேர்ச்சி என்ற தமிழக அரசின் முடிவை ஏற்க முடியாது" என அகில இந்திய தொழில்நுட்ப கல்விக் கழகம் தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

சென்னை,

தமிழகத்தில் கொரோனா தொற்று காரணமாக இறுதியாண்டு மாணவர்கள் தவிர அரியர் தேர்வு கட்டணம் செலுத்திய கலை மற்றும் பொறியியல் கல்லூரி மாணவர்கள் அனைவரும் தேர்ச்சி பெற்றதாக தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார்.  

இந்த நிலையில், தமிழக அரசின் முடிவை ஏற்க அகில இந்திய தொழில்நுட்ப கல்விக் கழகம்  மறுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.   இது தொடர்பாக அண்ணா பல்கலைக் கழகத்திற்கு அகில இந்திய தொழில்நுட்பக் கல்விக் குழு கடிதம் எனவும் தகவல் வெளியாகி இருக்கிறது.

"பொறியியல் படிப்பில் அரியர்ஸ் மாணவர்கள் தேர்ச்சி" என்ற தமிழக அரசின் முடிவை ஏற்க முடியாது  என அகில இந்திய தொழில்நுட்பக் கல்விக் குழு முடிவு என வெளியாகியுள்ள தகவல் ஏழு லட்சம் பொறியியல் மாணவர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 


Next Story