தமிழகத்தில் புதிதாக 5,976- பேருக்கு கொரோனா பாதிப்பு- சுகாதார துறை தகவல்


தமிழகத்தில் புதிதாக 5,976- பேருக்கு கொரோனா பாதிப்பு- சுகாதார துறை தகவல்
x
தினத்தந்தி 4 Sept 2020 6:18 PM IST (Updated: 4 Sept 2020 6:18 PM IST)
t-max-icont-min-icon

தமிழகத்தில் இன்று மேலும் 5,976- பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

சென்னை, 

தமிழகத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து உயர்ந்து கொண்டே வருகிறது. சுகாதாரத்துறை அமைச்சகம் இன்று வெளியிட்ட தகவலின் படி, தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 5,976-பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா தொற்று பாதிப்பால் ஒரே நாளில் 79 பேர்  உயிரிழந்துள்ளனர்.  கொரோனா பாதிப்பில் இருந்து ஒரே நாளில் 6,334-பேர் குணம் அடைந்துள்ளனர்.  

தமிழகத்தில் இதுவரை கொரோனா உறுதி செய்யப்பட்டவர்கள் எண்ணிக்கை 4, 51,827-ஆக உயர்ந்துள்ளது.  கொரோனா பாதிப்பால் இதுவரை உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 7,687- ஆக உள்ளது. தமிழகத்தில் இதுவரை செய்யப்பட்ட கொரோனா பரிசோதனை 50 லட்சத்தை தாண்டியுள்ளது. 

 தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 83,699- மாதிரிகள்  பரிசோதனை  செய்யப்பட்டுள்ளது. இதுவரை 51,30,741- மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டுள்ளது.  கொரோனா தொற்றுடன் சிகிச்சை பெறுபவர்கள் எண்ணிக்கை 51,633-ஆக உள்ளது. சென்னையில் இன்று ஒருநாளில் 992-பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னையை தவிர்த்து பிற மாவட்டங்களில் 4,984-பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

Next Story