அரசு பள்ளி மாணவர்களுக்கு டிசம்பருக்குள் ஷூ, சாக்ஸ் வழங்கப்படும்; அமைச்சர் செங்கோட்டையன்


அரசு பள்ளி மாணவர்களுக்கு டிசம்பருக்குள் ஷூ, சாக்ஸ் வழங்கப்படும்; அமைச்சர் செங்கோட்டையன்
x
தினத்தந்தி 4 Sept 2020 10:14 PM IST (Updated: 4 Sept 2020 10:14 PM IST)
t-max-icont-min-icon

அரசு பள்ளி மாணவர்களுக்கு வரும் டிசம்பருக்குள் ஷூ, சாக்ஸ் வழங்கப்படும் என அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்து உள்ளார்.

சென்னை,

ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையத்தில் நடைபெற்ற நலத்திட்ட உதவிகள் வழங்குதல் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகளில் தமிழக பள்ளிக்கல்வி துறை அமைச்சர் செங்கோட்டையன் கலந்து கொண்டார்.

இதன்பின் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் செங்கோட்டையன், அரசு பள்ளியில் படிக்கும் மாணவர்களுக்கு தொலைக்காட்சி மூலம் பாடம் கற்பிக்கப்படும் திட்டம் இந்தியாவில் வேறு எந்த மாநிலத்திலும் இல்லை என்று கூறினார்.

தொடர்ந்து அவர், அரசு பள்ளியில் பயிலும் மாணவ மாணவியர்களுக்கு வரும் டிசம்பர் மாத இறுதிக்குள் ஷூ, சாக்ஸ் உள்ளிட்டவை வழங்கப்படும்.  இந்தாண்டு 4 சீருடைகள் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கூறினார்.

Next Story