மெட்ரோ ரெயில் சேவை காலை 8 மணிக்கு பதிலாக 7 மணிக்கு இயக்கப்படும் - அமைச்சர் எம்.சி.சம்பத் பேட்டி
மெட்ரோ ரெயில் சேவை காலை 8 மணிக்கு பதிலாக 7 மணிக்கு இயக்கப்படும் என்று அமைச்சர் எம்.சி.சம்பத் தெரிவித்துள்ளார்.
சென்னை,
மெட்ரோ ரெயில் போக்குவரத்து 7-ம் தேதி தொடங்கவிருக்கும் நிலையில் தமிழக தொழில் துறை அமைச்சர் எம்.சி. சம்பத் ஆய்வு நடத்தினார். அதனைதொடர்ந்து செய்தியாளர்கள் சந்திப்பில் அவர் கூறியதாவது:-
கோரிக்கையை ஏற்று மெட்ரோ ரெயில் புறப்படும் நேரம் மாற்றப்பட்டுள்ளது. காலை 8 மணிக்குப் பதிலாக 7 மணிக்கே மெட்ரோ ரெயில் சேவை தொடங்கும் வகையில் மாற்றப்பட்டுள்ளது. அதுபோல காலை 7 மணி முதல் இரவு 8 மணி வரை மெட்ரோ ரெயில் இயக்கப்பட உள்ளது.
க்யூ.ஆர். வழிமுறையில் மெட்ரோ ரெயில் டிக்கெட்டுகள் வழங்கப்படும். மெட்ரோ ரெயில் சேவைக்கான நடைமுறைகள் எளிதாக்கப்பட்டுள்ளது. அதே சமயம், பழைய கட்டணமே வசூலிக்கப்படும். மெட்ரோ ரெயிலில் பயணிக்கும் பயணிகளுக்கு 100% பாதுகாப்பு வழங்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.

Related Tags :
Next Story