கொரோனா பரவல் கால கட்டத்திலும், 2 லட்சத்து 41 ஆயிரம் பேருக்கு அவசர கால சிகிச்சை - அமைச்சர் விஜயபாஸ்கர் தகவல்
கொரோனா பரவல் கால கட்டத்திலும், 2 லட்சத்து 41 ஆயிரம் பேருக்கு அவசர கால சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.
சென்னை,
தமிழ்நாடு விபத்து மற்றும் அவசர சிகிச்சை முன்னெடுப்பு திட்டத்தின் கீழ் கொரோனா காலத்தில் 2.41 லட்சம் பேருக்கு அவசரகால சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது என்று அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
மார்ச் மாதம் முதல் இதுவரை ஒரு லட்சத்து 52 ஆயிரம் பேருக்கு விபத்து காய சிகிச்சையும், 63 ஆயிரத்து 633 பேருக்கு அறுவை சிகிச்சையும் அளிக்கப்பட்டுள்ளது. விஷம் அருந்துதல் உள்ளிட்ட சுய தீங்கு பாதிப்பில் சிக்கிய 52 ஆயிரத்து 849 பேருக்கு சிகிச்சை வழங்கப்பட்டுள்ளது.
19 ஆயிரத்து 947 பேருக்கு பாம்பு கடிக்கான சிகிச்சையும், நான்காயிரத்து 494 குழந்தைகளுக்கு உயிர் காக்கும் சிகிச்சை, நான்காயிரத்து 432 பேருக்கு மாரடைப்புக்கான சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது. ஏழாயிரத்து 775 பேருக்கு பக்கவாத நோய்க்கு மருத்துவம் பார்க்கப்பட்டுள்ளது. இதுவரை மொத்தம் 2 லட்சத்து 41 ஆயிரம் பேருக்கு அவசரகால சிகிச்சை அளித்து பாராட்டை பெற்றுவருகிறது.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Tags :
Next Story