தமிழகத்தில் ஐந்து மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு 10 சதவீதம் அதிரிப்பு


தமிழகத்தில் ஐந்து மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு 10 சதவீதம் அதிரிப்பு
x
தினத்தந்தி 5 Sept 2020 5:24 PM IST (Updated: 5 Sept 2020 5:24 PM IST)
t-max-icont-min-icon

தமிழகத்தில் ஐந்து மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு 10 சதவீதம் அதிகமாக உள்ளது என்பது தெரியவந்துள்ளது.

சென்னை

சென்னை மற்றும் அதை சுற்றியுள்ள மாவட்டங்களிலேயே கொரோனா பாதிப்பு அதிகமாக இருந்த வந்த நிலையில், கடந்த சில நாட்களாக பிற மாவட்டங்களிலும் பாதிப்பு அதிகரித்து வருகிறது என்பதை சில முக்கிய எண்கள் நமக்கு தெரிவிக்கின்றன.

கொரோனா பாதிப்பு பாசிடிவிடி ரேட் என்பது 100 மாதிரிகள் பரிசோதனைக்கு எடுத்துக் கொண்டால் எத்தனை பேருக்கு தொற்று உறுதி செய்யப்படுகிறது என்ற விகிதமாகும். இதனைக் கொண்டு நோய் பரவல் சம்பந்தப்பட்ட பகுதியில் எவ்வளவு உள்ளது என்று கணிக்க முடியும். பொதுவாக 3% குறைவாக இருக்க வேண்டும் என பொது சுகாதார நிபுணர்கள் கூறுகின்றனர்.

ஆகஸ்ட் 27ம் தேதி முதல் செப்டம்பர் 2ம் தேதி வரையிலான ஒரு வாரத்தில் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனைகள் அடிப்படையில் தமிழகத்தில் ஆறு மாவட்டங்களில் 10 சதவீதம் மற்றும் அதற்கும் அதிகமாக பாசிடிவிடி ரேட் பதிவாகியுள்ளது. நாகப்பட்டினத்தில் 14.1 சதவீதம், கடலூரில் 11.5 சதவீதம், திருவாரூரில் 10.7சதவீதம், திருவண்ணாமலையில் 10.3 சதவீதம், கிருஷ்ணகிரியில் 10.2சதவீதம் மற்றும் புதுக்கோட்டையில் 10 சதவீதம்பாசிடிவிடி ரேட் பதிவாகியுள்ளது.

இந்த பட்டியலில் 8.9 சதவீதம் பாசிடிவிடி ரேட் கோண்டு சென்னை 10 வது இடத்தில் உள்ளது. தூத்துக்குடி, காஞ்சிபுரம், ராமநாதபுரம், திருப்பத்தூர், நீலகிரி, பெரம்பலூர், சிவகங்கை, மதுரை, விருதுநகர் ஆகிய ஒன்பது மாவட்டங்களில் ஆறு சதவீதத்துக்கும் குறைவாக பாசிடிவிடி ரேட் உள்ளது.

குறைந்தபட்சமாக விருந்துநகரில் 3.5 சதவீதம், மதுரையில் 3.6 சதவீதம், சிவகங்கையில் 3.8 சதவீதம் ஆக உள்ளது. மாநிலத்தின் சராசரி பாசிடிவிடி ரேட் 7.6 சதவீதம் ஆக கடந்த வாரம் இருந்துள்ளது.



Next Story