தமிழகத்தில் 15 மாவட்டங்களில் இன்று மழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம் தகவல்
தமிழகத்தில் 15 மாவட்டங்களில் இன்று மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சென்னை,
தமிழகத்தில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்பசலனம் காரணமாக இன்றும் (ஞாயிற்றுக்கிழமை), நாளையும் (திங்கட்கிழமை) மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
அதிலும் குறிப்பாக இன்று வேலூர், கள்ளக்குறிச்சி, விழுப்புரம், திருவண்ணாமலை, திருப்பூர், தஞ்சாவூர், திருவாரூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, நாகப்பட்டினம், கடலூர், பெரம்பலூர், அரியலூர், புதுக்கோட்டை, சிவகங்கை ஆகிய 15 மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு இருக்கிறது.
இதுதவிர தேனி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், கோவை, நீலகிரி, சேலம், நாமக்கல், கரூர், திருச்சி ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடியுடன் மழை பெய்யக்கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேபோல், நாளையும் தமிழகத்தில் ஒரு சில இடங்களில் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. சென்னையை பொறுத்தவரையில் இன்று வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் சில இடங்களில் இடியுடன் லேசான மழை பெய்யக்கூடும்.
நேற்று காலை 8.30 மணியுடன் முடிவடைந்த 24 மணிநேரத்தில் தமிழகத்தில், ‘உசிலம்பட்டி 13 செ.மீ. தேவாலா, குப்பனம்பட்டி தலா 9 செ.மீ., சிவகங்கை, ஒகேனக்கல், இடையப்பட்டி, கிருஷ்ணராயபுரம் தலா 8 செ.மீ., பெரியகுளம், சின்னக்கல்லாறு, கோடநாடு தலா 7 செ.மீ.’ உள்பட பல இடங்களில் மழை பெய்துள்ளது.

Related Tags :
Next Story