தமிழகத்தில் 12 ஐ.பி.எஸ். அதிகாரிகள் இடமாற்றம் - தமிழக அரசு உத்தரவு


தமிழகத்தில் 12 ஐ.பி.எஸ். அதிகாரிகள் இடமாற்றம் - தமிழக அரசு உத்தரவு
x
தினத்தந்தி 6 Sept 2020 5:00 AM IST (Updated: 6 Sept 2020 4:25 AM IST)
t-max-icont-min-icon

தமிழகத்தில் 12 ஐ.பி.எஸ். அதிகாரிகளை இடமாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டு உள்ளது. அதன்படி சென்னை உளவுப்பிரிவு துணை கமிஷனராக எஸ்.விமலா நியமிக்கப்பட்டு உள்ளார்.

சென்னை,

தமிழக அரசின் கூடுதல் தலைமை செயலாளர் எஸ்.கே.பிரபாகர் பிறப்பித்த உத்தரவில் கூறியிருப்பதாவது:-

1. ஆர்.கிருஷ்ணராஜ்- சிவகங்கை மாவட்டம் தேவக்கோட்டை உதவி எஸ்.பி.யான இவர், பதவி உயர்வு பெற்று சென்னை போக்குவரத்து (வடக்கு) துணை கமிஷனராக மாற்றப்பட்டார்.

2. டாக்டர் டி.கே.ராஜசேகரன்- சென்னை போக்குவரத்து(வடக்கு) துணை கமிஷனரான இவர், சென்னை தலைமையக துணை கமிஷனராக நியமிக்கப்பட்டார்.

3. எஸ்.விமலா- சென்னை தலைமையக துணை கமிஷனரான இவர் சென்னை உளவுப்பிரிவு (1) துணை கமிஷனராக பொறுப்பு ஏற்பார்.

4. ஆர்.திருநாவுக்கரசு- சென்னை உளவுப்பிரிவு (1) துணை கமிஷனரான இவர், சட்டம்-ஒழுங்கு உதவி ஐ.ஜி.யாக மாற்றப்பட்டார்.

5. ஈ.டி.சாம்சன்- சட்டம்-ஒழுங்கு உதவி ஐ.ஜி.யான இவர் சென்னை ஐகோர்ட்டு பாதுகாப்பு பிரிவு துணை கமிஷனராக பொறுப்பு ஏற்பார்.

6. பி.சுந்தரவடிவேல்- சென்னை ஐகோர்ட்டு பாதுகாப்பு பிரிவு துணை கமிஷனரான இவர் திருப்பூர் தலைமையக துணை கமிஷனராக மாற்றப்பட்டார்.

7. கே.ஸ்ரீதர் பாபு- சென்னை ஐகோர்ட்டு வழக்குகள் கண்காணிப்பு குழு உதவி ஐ.ஜி.யான இவர், சென்னை உளவுப்பிரிவு துணை கமிஷனராக நியமிக்கப்பட்டார்.

8. டாக்டர் எம்.சுதாகர்- சென்னை உளவுப்பிரிவு துணை கமிஷனரான இவர் சென்னை ஐகோர்ட்டு வழக்குகள் கண்காணிப்பு குழு உதவி ஐ.ஜி.யாக பொறுப்பு ஏற்பார்.

9. ஆர்.வி.வருண்குமார்- கட்டாய காத்திருப்போர் பட்டியலில் இருந்த இவர் சென்னை போலீஸ், கணினி மற்றும் தானியங்கி பிரிவு எஸ்.பி.யாக பதவி வகிப்பார்.

10. ஜெ.முத்தரசி- சென்னை போலீஸ் கணினி மற்றும் தானியங்கி பிரிவு எஸ்.பி.யான இவர் சென்னை சி.பி.சி.ஐ.டி. எஸ்.பி.யாக மாற்றப்பட்டார்.

11. பிரவேஷ் குமார்- வேலூர் மாவட்ட எஸ்.பி.யாக இருந்து சென்னை ரெயில்வே எஸ்.பி.யாக மாற்றப்பட்டு இருந்த இவர் தர்மபுரி மாவட்ட எஸ்.பி.யாக நியமிக்கப்பட்டார்.

12. பி.ராஜன்- தர்மபுரி மாவட்ட எஸ்.பி.யான இவர் சென்னை ரெயில்வே எஸ்.பி.யாக பொறுப்பு ஏற்பார்.

இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

Next Story