சென்னையில் இருந்து சிறப்பு அனுமதி பெற்று 12 விமானங்கள் வெளிநாடுகளுக்கு சென்றன
சென்னையில் இருந்து சிறப்பு அனுமதி பெற்று 12 விமானங்கள் வெளிநாடுகளுக்கு சென்றது.
சென்னை,
கொரோனா வைரஸ் காரணமாக நாடு முழுவதும் பன்னாட்டு விமான சேவை தடை செய்யப்பட்டு உள்ளது. உள்நாட்டு விமான சேவை மட்டும் நடைபெற்று வருகிறது.
பல்வேறு நாடுகளில் சிக்கி தவித்த இந்தியர்களை மத்திய அரசின் வந்தே பாரத் என்ற திட்டத்தில் சிறப்பு விமானங்களில் அழைத்து வரப்படுகின்றனர். அதன்படி தமிழகத்துக்கு இந்த திட்டத்தின் மூலமாக 78 ஆயிரம் பேர் அழைத்து வரப்பட்டு உள்ளனர்.
இந்த நிலையில் தமிழகத்தில் பல்வேறு இடங்களில் தங்கி இருந்த என்.ஆர்.ஐ. மற்றும் வெளிநாட்டு வேலைக்கு செல்ல கூடியவர்கள், வெளிநாடுகளில் கார்ப்பரேட் நிறுவனங்களில் பணியாற்றுபவர்கள் தாங்கள் வேலைக்கு திரும்பிச்செல்ல மத்திய அரசிடம் இருந்து சிறப்பு அனுமதி பெற்றனர்.
இதையடுத்து சென்னை மீனம்பாக்கம் பன்னாட்டு முனையத்தில் இருந்து அமெரிக்கா, லண்டன், பாரீஸ், துபாய், அபுதாபி, சவுதி அரேபியா போன்ற நாடுகளுக்கு 12 சிறப்பு விமானங்கள் புறப்பட்டு சென்றன. இந்த விமானங்களில் 1,234 பேர் சோதனைகளை முடித்துக்கொண்டு புறப்பட்டு சென்றனர்.
Related Tags :
Next Story