உடல் நலக்குறைவு மற்றும் சாலை விபத்துகளில் உயிரிழந்த 25 காவலர்கள் குடும்பத்திற்கு தலா ரூ.3 லட்சம் இழப்பீடு வழங்க முதலமைச்சர் பழனிசாமி உத்தரவு
உடல் நலக்குறைவு மற்றும் சாலை விபத்துகளில் உயிரிழந்த 25 காவலர்கள் குடும்பத்திற்கு தலா ரூ.3 லட்சம் இழப்பீடு வழங்க முதலமைச்சர் பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.
சென்னை,
இது குறித்து முதலமைச்சர் பழனிசாமி இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
செங்கல்பட்டு மாவட்டம், மாமல்லபுரம் காவல் நிலையம், தனிப்பிரிவில் தலைமைக் காவலராகப் பணிபுரிந்து வந்த திரு. பா. ஈஸ்வரன்; காஞ்சிபுரம் தாலுகா காவல் நிலையத்தில் சிறப்பு உதவி ஆய்வாளராகப் பணிபுரிந்து வந்ததிரு. கோ. தனபால்; மதுரை மாநகரம், கூடல்புதூர் காவல் நிலையத்தில் காவலராகப்பணிபுரிந்து வந்த திரு. நீலமேகம்; சென்னை பெருநகரக் காவல், சேத்துப்பட்டு காவல் நிலையத்தில் சட்டம் (ம) ஒழுங்குப் பிரிவில் முதல் நிலை பெண் காவலராகப் பணிபுரிந்து வந்த திருமதி வ. எழிலரசி; யானைக்கவுனி காவல் நிலையத்தில் சட்டம் (ம) ஒழுங்குப்பிரிவில் தலைமைக் காவலராகப் பணிபுரிந்து வந்த திரு. மு. சுரேஷ்; பட்டாபிராம் காவல் நிலையம் சட்டம் (ம) ஒழுங்குப் பிரிவில் சிறப்பு உதவி ஆய்வாளராகப் பணிபுரிந்து வந்த திரு. ர. வெங்கடேசன்; மாதவரம் போக்குவரத்து காவல் பிரிவில் தலைமைக் காவலராகப் பணிபுரிந்து வந்த திரு. ஜெ. மோகன்; துறைமுகம் காவல் நிலைய சட்டம் (ம) ஒழுங்குப் பிரிவில் உதவி ஆய்வாளராகப் பணிபுரிந்து வந்த திரு. கோ. ஹரிகிருஷ்ணன்; சென்னை பெருநகரக் காவல், புதுப்பேட்டை, பணியிடைப் பயிற்சி மையத்தில் உதவி ஆய்வாளராகப் பணிபுரிந்து வந்த திரு. க. சேகர்; வேப்பேரி, குற்ற ஆவணக் காப்பகத்தில் பெண் உதவி ஆய்வாளராகப் பணிபுரிந்து வந்த திருமதி எஸ். சாந்தி;
தஞ்சாவூர் மாவட்டம், தஞ்சாவூர் மேற்கு காவல் நிலையத்தில் தலைமைக்காவலராகப் பணிபுரிந்து வந்த திரு. அ. அன்பரசன்; திண்டுக்கல் மாவட்டம், சாணார்பட்டி காவல் நிலையத்தில் தலைமைக்காவலராகப் பணிபுரிந்து வந்த திரு. ந. நடராஜன்; கன்னியாகுமரி மாவட்டம், நாகர்கோவில் காவல் கட்டுப்பாட்டு அறையில் சிறப்பு உதவி ஆய்வாளராகப் பணிபுரிந்து வந்த திரு.சி.ராமச்சந்திரன்;
திருச்சிராப்பள்ளி மாவட்டம், சிறுகனூர் காவல் நிலையத்தில் சிறப்பு உதவி ஆய்வாளராகப் பணிபுரிந்து வந்த திரு. ஆர். பன்னீர்செல்வம்; நாகப்பட்டினம் மாவட்டம், திருவெண்காடு காவல் நிலையத்தில் சிறப்பு உதவி ஆய்வாளராகப் பணிபுரிந்து வந்த திரு. அலெக்ஸாண்டர்; சேலம் மாவட்டம், மாநகர காவல் துறையில் வடக்கு போக்குவரத்துப்பிரிவில் சிறப்பு உதவி ஆய்வாளராகப் பணிபுரிந்து வந்த திரு. து. அம்பேத்கார்; ஆகியோர் உடல் நலக் குறைவால் காலமானார்கள் என்ற செய்தியை அறிந்து நான் மிகுந்த வேதனை அடைந்தேன்.
மதுரை மாநகரம், கீரைத்துறை காவல் நிலையத்தில் காவலராகப்பணிபுரிந்து வந்த திரு.க. சிவக்குமார்; ஆயுதப்படையில் காவலராகப்பணிபுரிந்து வந்த திரு. ராஜேஸ்கண்ணன்; மதுரை மாவட்டம், தல்லாகுளம் போக்குவரத்து காவல் பிரிவில் பணிபுரிந்து வந்த ஆயுதப்படை முதல் நிலை பெண் காவலர் செல்வி நா. ஜோதி; திண்டுக்கல் மாவட்டம், திண்டுக்கல் நகர் வடக்கு காவல் நிலையத்தில் சிறப்பு உதவி ஆய்வாளராகப் பணிபுரிந்து வந்த திரு. அ. தங்கபாண்டி; ஆயுதப்படையில் காவலராகப் பணிபுரிந்து வந்த திரு. கே.ப்பி. கார்த்திக்;
சென்னை பெருநகரக் காவல், புதுப்பேட்டை, ஆயுதப்படை, ஆ நிறுமம், 8ஆம் அணியில் இரண்டாம் நிலைக் காவலராகப் பணிபுரிந்து வந்த திரு. ப. ராஜா; புனித தோமையர் மலை போக்குவரத்து காவல் நிலையத்தில் சிறப்பு உதவி ஆய்வாளராகப் பணிபுரிந்து வந்த திரு. கா. நடராஜன்; நாகப்பட்டினம் மாவட்டம், மயிலாடுதுறை காவல் நிலையத்தில் சிறப்பு உதவி ஆய்வாளராகப் பணிபுரிந்து வந்த திரு. ட்டி. சேகர்; ஆயுதப்படையில் தலைமைக் காவலராகப் பணிபுரிந்து வந்த திரு. கே. உலகநாதன்; ஆகியோர் பல்வேறு சாலை விபத்துகளில் உயிரிழந்தனர் என்ற செய்தியையும் அறிந்து நான் மிகுந்த வேதனை அடைந்தேன்.
உடல் நலக் குறைவு மற்றும் சாலை விபத்துகளில் உயிரிழந்த25 காவலர்களின் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும் அனுதாபத்தையும் தெரிவித்துக்கொள்கிறேன். மேற்கண்ட பல்வேறு துயரச் சம்பவங்களில் உயிரிழந்த 25 காவலர்களின் குடும்பத்தினருக்கு தலா மூன்று லட்சம் ரூபாய் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்க நான் உத்தரவிட்டுள்ளேன்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Related Tags :
Next Story