"இந்தி தெரியாது போடா" என்ற ஹேஷ்டேக் முதலிடம்; இளைஞர்களிடம் வரவேற்பு பெற்றிருப்பது மகிழ்ச்சியளிக்கிறது - கனிமொழி எம்.பி, டுவீட்

இந்தி தெரியாது போடா என்ற ஹேஷ்டேக் டுவிட்டரில் ட்ரெண்டாகிவருகிறது.
சென்னை,
திரை உலக பிரபலங்கள் சிலர் இந்தி மொழிக்கு எதிரான வாசகங்கள் அடங்கிய டீசர்ட்களை அணிந்த புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் பெரும் வைரலாகி வருகிறது.
இந்தநிலையில், இசையமைப்பாளர் யுவன்சங்கர் ராஜா, ‘ I am a தமிழ் பேசும் indian’ என்று அச்சிடப்பட்ட டி.சர்ட்டை அணிந்துள்ளார். அவர், அருகில் இருக்கும் மெட்ரோ படத்தின் நடிகர், ‘இந்தி தெரியாது போடா..’ என்ற வாசகம் அடங்கிய டிசர்ட்டை அணிந்துள்ளார். இந்தப் புகைப்படங்களை அவர்கள் டுவிட்டரில் பதிவிட்டிருந்தனர்.
நடிகர் சாந்தனுவும், அவருடைய மனைவி கிருத்திகாவும், ’I am a தமிழ் பேசும் indian’, இந்தி தெரியாது போடா என்ற வாசகங்கள் அடங்கிய டிசர்ட்டை அணிந்து புகைப்படத்தை டுவிட்டரில் பதிவிட்டுள்ளனர்.
இநிலையில், இந்தி தெரியாது போடா என்ற ஹேஷ்டேக் டுவிட்டரில் ட்ரெண்டாகிவருகிறது.
மேலும், திரைப்பிரபலங்கள், பொதுமக்கள் என ஏராளாமானோர் இதேபோன்று வாசகத்துடன் டிஷர்ட் அணிந்து டுவிட்டரில் பதிவிட்டு வருகின்றனர்.
இதனிடையே திமுக எம்.பி.,கனிமொழி டுவிட்டர் பதிவில்,
ஒரு சிறிய தீப்பொறி காட்டுத் தீயாகி இருக்கிறது. இந்தித் திணிப்பு என்பதை எதிர்க்கும் சட்டைகளை வெளியிட்டபோது யாரும் எதிர்பாராத அளவு இது இளைஞர்களிடம் வரவேற்பு பெற்றிருப்பது மகிழ்ச்சியளிக்கிறது. இந்தத் தலைமுறையும் மொழி உணர்வில் சளைத்ததல்ல என பதிவிட்டுள்ளார்.

Related Tags :
Next Story