தமிழகத்தில் பள்ளி சிறுவர்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் அதிகரிப்பு
தமிழகத்தில் பள்ளி சிறுவர்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் அதிகரித்துள்ளதாக தகவல் அறியும் உரிமைச் சட்டத்தில் அம்பலமாகி உள்ளது.
சென்னை,
இந்தியாவில் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் மீது ஆண்டுக்கு 30 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வழக்குகள் போக்ஸோ சட்டத்தின் கீழ் பதியப்படுவதாக தேசிய குற்ற ஆவண காப்பகத்தின் அதிர்ச்சி புள்ளி விவரங்கள் சமீபத்தில் வெளியானது அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
2018-ல் பாலியல் வன்கொடுமைக் குற்றங்கள் தொடர்பாக போக்ஸோ சட்டப் பிரிவு 4, 6-ன் கீழ் போடப்பட்ட வழக்குகளில் 63,636 வழக்குகள் நிலுவையில் உள்ளன என்று கூறப்பட்டுள்ளது.
இந்நிலையில், தமிழகத்தில் பள்ளிகளில் குழந்தைகளுக்கு எதிராக நடக்கும் பாலியல் குற்றங்கள் குறித்து மாநில குற்ற ஆவண காப்பகத்தில் தகவல் அறியும் உரிமை சட்டம் மூலமாக தகவல் கோரப்பட்டிருந்தது. அதன்படி, கிடைத்த தகவல்கள் அதிர்ச்சியளிக்கும் வகையில் உள்ளன. அதாவது, பள்ளிகளில் குழந்தைகளுக்கு எதிராக நடக்கும் குற்றங்கள் தற்போது அதிகரித்து வருகிறது.
2013-ம் ஆண்டுக்கு பிறகு ஆண்டுக்கு சராசரியாக 16 குற்றங்கள் வழக்குகளாக பதியப்பட்டுள்ளன. 2019-ம் ஆண்டு 2,410 சம்பவங்கள் நடந்துள்ளன. 2018ம் ஆண்டு 2,052 குற்ற சம்பவங்கள் பதியப்பட்டுள்ளன
தமிழகத்தில் பள்ளிகள் அல்லாத இடங்களிலும் குழந்தைகளுக்கு எதிராக நடக்கும் பாலியல் குற்றங்கள் மிக அதிகமாகி உள்ளன.
அதாவது, 2013-ம் ஆண்டு 419 ஆக இருந்த பதியப்பட்ட பாலியல் குற்றங்கள், 2014-ல் 1,055 ஆக உயர்ந்துள்ளது. இது 2015-ல் 1,546 ஆகவும் 2016-ல் 1,585 ஆகவும் 2018-ல் 2,052 ஆகவும் 2019-ல் 2,410 ஆகவும் அதிகரித்து வருவது ஆர்டிஐ மூலம் தெரியவந்துள்ளது. மேலும், இந்த ஆண்டில் ஜூலை வரை 2000-க்கும் மேற்பட்ட பாலியல் குற்ற வழக்குகள் பதியப்பட்டுள்ளன. 2006ம் ஆண்டு முதல் படிப்படியாக பாலியல் குற்ற சம்பவங்கள் அதிகரித்துள்ளதாக கூறப்படுகிறது.

Related Tags :
Next Story