நீட் தேர்வை ரத்து செய்யக் கோரி திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி தலைமையில் ஆர்ப்பாட்டம்


நீட் தேர்வை ரத்து செய்யக் கோரி திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி தலைமையில் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 8 Sept 2020 10:53 AM IST (Updated: 8 Sept 2020 10:53 AM IST)
t-max-icont-min-icon

நீட் தேர்வை ரத்து செய்யக் கோரி திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி தலைமையில் சென்னையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்று வருகிறது.

சென்னை,

கொரோனா ஊரடங்கு காரணமாக பள்ளிகள் திறக்கப்படாமல் இருக்கும் நிலையில் மாணவர்களுக்கு ஆன்லைன் மூலம் பாடங்கள் நடத்தப்பட்டு வருகிறது. இருப்பினும் இதில் பல்வேறு நடைமுறை சிக்கல்கள் இருப்பதாக குற்றம்சாட்டப்பட்டு வருகிறது.

மேலும் ஊரடங்கிற்கு மத்தியில் நீட் தேர்வு நடத்துவதற்கான அறிவிப்பை மத்திய அரசு வெளியிட்டுள்ளது குறித்து நாடு முழுவதும் பல்வேறு கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. கொரோனா பரவல் அபாயம் இருப்பதாலும், மன உலைச்சல் காரணமாக மாணவர்கள் தற்கொலை செய்து கொள்ளும் சம்பவங்கள் அரங்கேறுவதாலும் நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில் நீட் தேர்வை ரத்து செய்யக் கோரியும், ஆன்லைன் வகுப்புகளை முறைப்படுத்த கோரியும் திமுக இளைஞரணி ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. இதனை தொடர்ந்து தற்போது சென்னையில் திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் தலைமையில் மேற்கண்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்று வருகிறது.

Next Story