சென்னை காவலர்களுக்கு இன்ப அதிர்ச்சி: பிறந்தநாள் அன்று விடுமுறை வழங்க காவல்துறை ஆணையர் உத்தரவு


சென்னை காவலர்களுக்கு இன்ப அதிர்ச்சி: பிறந்தநாள் அன்று விடுமுறை வழங்க காவல்துறை ஆணையர் உத்தரவு
x
தினத்தந்தி 8 Sept 2020 11:24 AM IST (Updated: 8 Sept 2020 11:24 AM IST)
t-max-icont-min-icon

சென்னை காவல்துறையைச் சேர்ந்த காவலர்களுக்கு பிறந்த நாள் அன்று விடுமுறை அளிக்கப்படும் என சென்னை காவல்துறை ஆணையர் மகேஷ்குமார் அகர்வால் உத்தரவிட்டுள்ளார்.

சென்னை,

கொரோனா ஊரடங்கிற்கு மத்தியில் காவல்துறையினர் இரவு பகலாக கண்காணிப்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் அவர்களுக்கு கடும் மனஉளைச்சல் ஏற்பட்டு, சில காவலர்கள் பொது மக்களிடம் மிகவும் கடுமையாக நடந்து கொள்கிறார்கள் என குற்றம்சாட்டப்படுகிறது. இதற்கிடையில் காவலர்கள் சிலர் பணிச்சுமை காரணமாக தற்கொலை செய்து கொள்ளும் சம்பவங்களும் நடைபெறுகின்றன.

இந்நிலையில் சென்னை மாநகர காவல் ஆணையர் மகேஷ்குமார் அகர்வால் இன்று வெளியிட்டுள்ள அறிவிப்பு சென்னை காவலர்களுக்கு இன்ப அதிர்ச்சி அளிக்கும் விதமாக அமைந்துள்ளது. சென்னை காவல்துறை காவலர்களுக்கு அவர்களது பிறந்தநாள் அன்று விடுமுறை வழங்க காவல்துறை ஆணையர் மகேஷ்குமார் உத்தரவிட்டுள்ளார்.

பிறந்தநாளுக்கு முன்தினம் காவலர்களுக்கு காவல்நிலையத்தில் வைத்து மற்ற காவலர்கள் வாழ்த்து தெரிவிக்க வேண்டும் எனவும் அவர் கூறியுள்ளார். காவலர்களின் பணிச்சுமை மற்றும் மன அழுத்தத்தை குறைக்கும் விதத்தில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

Next Story