திருவண்ணாமலை மாவட்டம் சாத்தனூர் அணையில் இருந்து தண்ணீர் திறக்க முதலமைச்சர் பழனிசாமி உத்தரவு


திருவண்ணாமலை மாவட்டம் சாத்தனூர் அணையில் இருந்து தண்ணீர் திறக்க முதலமைச்சர் பழனிசாமி உத்தரவு
x
தினத்தந்தி 8 Sept 2020 5:51 PM IST (Updated: 8 Sept 2020 5:51 PM IST)
t-max-icont-min-icon

திருவண்ணாமலை மாவட்டம் சாத்தனூர் அணையில் இருந்து தண்ணீர் திறக்க முதலமைச்சர் பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.

சென்னை,

இது குறித்து முதலமைச்சர் பழனிசாமி இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

திருவண்ணாமலை மாவட்டம், சாத்தனூர் அணையிலிருந்து குடிநீர் தேவைகளுக்காக தென்பெண்ணையாற்றில் தண்ணீர் திறந்து விட பொது மக்களிடமிருந்து கோரிக்கைகள் வைத்துள்ளன. 

இந்த நிலையில் மக்களின் இந்த கோரிக்கையினை ஏற்று, திருவண்ணாமலை மாவட்டம், சாத்தனூர் அணையிலிருந்து 9.9.2020 முதல் 6 தினங்களுக்கு 264.38 மி.க. அடி நீரினை குடிநீர் தேவைகளுக்காக சாத்தனூர் அணையிலிருந்து தென்பெண்ணையாற்றில் எல்லீஸ் அணைக்கட்டு வரை தண்ணீர் திறந்துவிட நான் ஆணையிட்டுள்ளேன்.

இதனால், விழுப்புரம் மாவட்டம் குடிநீர் வசதி பெறும் என்பதைமகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறேன்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Next Story