அண்ணா பல்கலைக்கழக பொறியியல் இறுதி செமஸ்டர் தேர்வுகள் ஆன்லைனில் நடத்தப்படும் - அண்ணா பல்கலைக்கழகம் அறிவிப்பு


அண்ணா பல்கலைக்கழக பொறியியல் இறுதி செமஸ்டர் தேர்வுகள் ஆன்லைனில் நடத்தப்படும் - அண்ணா பல்கலைக்கழகம் அறிவிப்பு
x
தினத்தந்தி 8 Sept 2020 6:05 PM IST (Updated: 8 Sept 2020 6:05 PM IST)
t-max-icont-min-icon

அண்ணா பல்கலைக்கழக இறுதி செமஸ்டர் தேர்வு வரும் 22-ம் தேதி முதல் 29-ம் தேதி வரை நடைபெறும் என்று அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.

சென்னை,

தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொற்று அச்சுறுத்தல் காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளதால், கல்லூரி, பள்ளி உள்ளிட்ட கல்வி நிலையங்கள் மூடப்பட்டுள்ளன. இதனால், மாணவர்களின் கல்வியில் பாதிப்பு ஏற்பட்டுவிடக்கூடாது என்பதற்காக ஆன்லைன் வகுப்புகள் நடத்தப்படுகிறது.

இதையடுத்து இறுதி ஆண்டு இறுதி செமஸ்டர் தேர்வைத் தவிர்த்து மற்ற செமஸ்டர் தேர்வுகள் ரத்து செய்யப்படுவதாகவும் அரியர் தேர்வுக்கு விண்ணப்பித்து தேர்வு எழுத காத்திருக்கும் மாணவர்கள் அனைவருக்கும் அரியர் தேர்வு எழுதுவதில் இருந்து விலக்கு அளிக்கப்படுவதாகவும் முதலமைச்சர் பழனிசாமி அறிவித்தார். ஆனால், கல்லூரி இறுதி ஆண்டு இறுதி செமஸ்டர் தேர்வு கட்டாயமாக நடத்தப்படவேண்டும் என யூஜிசி அறிவித்திருந்தது.

இந்நிலையில் அண்ணா பல்கலைக்கழக பொறியியல் மாணவர்களுக்கான  இறுதி செமஸ்டர் தேர்வு செப்டம்பர் 22-ந்தேதி முதல் 29-ந்தேதி வரை நடத்தப்படும் என அண்ணா பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது. 

இறுதி செமஸ்டர் தேர்வுகள் ஆன்லைன் மூலம் நடத்தப்படும் என்றும் தேர்வுக்கு கேமரா, மைக்ரோ போன் வசதி கொண்ட ஸ்மார்ட் போன், கம்ப்யூட்டர், லேப்டாப் போன்றவற்றை பயன்படுத்தலாம் என்றும், விடையைத் தேர்வு செய்யும் வகையிலான கேள்வித்தாள் தயாரிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.தேர்வுக்கு முன் மாதிரி தேர்வு நடத்தப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Next Story