புதிய கல்விக் கொள்கையை படிப்படியாக செயல்படுத்த மத்திய அரசு முடிவு செய்துள்ளது கவலையளிக்கிறது - திமுக எம்.பி.கனிமொழி
புதிய கல்விக் கொள்கையை படிப்படியாக செயல்படுத்த மத்திய அரசு முடிவு செய்துள்ளது கவலையளிக்கிறது என்று திமுக எம்.பி.கனிமொழி தெரிவித்துள்ளார்.
சென்னை,
இந்தியாவில் கல்வியின் தரத்தை மேம்படுத்தும் வகையில் புதிய தேசிய கல்வி கொள்கை உருவாக்கப்பட்டு உள்ளது. இதற்கு மத்திய மந்திரிசபை சமீபத்தில் ஒப்புதல் அளித்தது.
மத்திய அரசு கொண்டு வந்துள்ள புதிய தேசிய கல்விக்கொள்கைக்கு திமுக உட்பட எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்து வந்தன.
இதில் இடம் பெற்றுள்ள மும்மொழி திட்டத்தை ஏற்க முடியாது என்றும் தமிழ்நாட்டில் இரு மொழி கொள்கையே நீடிக்கும் என்றும், மும்மொழி கொள்கையை அமல்படுத்தமாட்டோம் என்றும் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அண்மையில் அறிவித்தார்.
இந்நிலையில் புதிய கல்விக் கொள்கையை படிப்படியாக செயல்படுத்த மத்திய அரசு முடிவு செய்துள்ளது கவலையளிக்கிறது என்று திமுக எம்.பி.கனிமொழி தெரிவித்துள்ளார்.
இது குறித்து திமுக எம்.பி.கனிமொழி டுவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:-
புதிய கல்விக்கொள்கையை 2021-22 கல்வியாண்டு முதல் படிப்படியாக செயல்படுத்துவதென்ற மத்திய அரசின் முடிவு கவலையளிக்கிறது. பல்வேறு மாநிலங்கள் தங்களது எதிர்ப்பை பதிவுசெய்துள்ள நிலையில் பாராளுமன்றத்தில் விவாதம் நடத்தும் முன்னரே செயல்படுத்துவது கூட்டாட்சித் தத்துவத்திற்கே எதிரானது.

— Kanimozhi (கனிமொழி) (@KanimozhiDMK) September 8, 2020
2/2
Related Tags :
Next Story