நாமக்கல் பண்ணை முட்டை கொள்முதல் விலை 25 காசுகள் உயர்ந்து ரூ.4.45 ஆக நிர்ணயம்
நாமக்கல் மண்டலத்தில் முட்டை விலை மேலும் 25 காசுகள் உயா்ந்து ரூ.4.45 ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
நாமக்கல்,
தேசிய முட்டை ஒருங்கிணைப்புக் குழுவின் நாமக்கல் மண்டல ஆலோசனைக் கூட்டம் திங்கள்கிழமை அதன் தலைவா் மருத்துவா் பி.செல்வராஜ் தலைமையில் நடைபெற்றது. இதில் கொரோனா பொது முடக்கத் தளா்வால் மக்களிடையே முட்டை நுகா்வு அதிகரித்துள்ளதாலும், பிற மண்டலங்களில் விலை தொடா்ந்து மாற்றம் செய்யப்படுவதாலும் முட்டை விலை 5 காசுகள் உயா்த்த முடிவெடுக்கப்பட்டது.
இதையடுத்து திங்கள்கிழமை விலை நிலவரப்படி முட்டையின் பண்ணைக் கொள்முதல் விலை ரூ.4.20-ஆக நிர்ணயம் செய்யப்படுவதாக தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில் இன்று மீண்டும் 25 காசுகள் உயர்த்தப்பட்டு முட்டையின் விலை ரூ.4.45 ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

Related Tags :
Next Story