தமிழகத்தில் 5 நாட்களுக்கு ஆன்லைன் வகுப்பு நிறுத்தப்படுவதாக அறிவிப்பு


தமிழகத்தில் 5 நாட்களுக்கு ஆன்லைன் வகுப்பு நிறுத்தப்படுவதாக அறிவிப்பு
x
தினத்தந்தி 9 Sept 2020 1:17 PM IST (Updated: 9 Sept 2020 1:17 PM IST)
t-max-icont-min-icon

மாணவர்களின் மனஅழுத்தத்தை குறைக்க வரும் 21 ந்தேதி முதல் 5 நாட்களுக்கு ஆன்லைன் வகுப்பு நிறுத்தப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை,

கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த லாக்டவுன் அறிவிக்கப்பட்டதை அடுத்து மார்ச் மாதம் முதல் பள்ளி கல்லூரிகள் அனைத்து கல்வி நிலையங்களும் மூடப்பட்டுள்ளன. மாணவர்களுக்கு ஆன்லைன் மூலம் வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன.

இந்நிலையில் தமிழகத்தில் வரும் 21 ந்தேதி முதல் 5 நாட்களுக்கு ஆன்லைன் வகுப்பு நிறுத்தப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 5 நாளிலும் ஆன்லைன் வகுப்பு நடக்கிறதா என பிளாக்லெவல் அலுவலர்கள் ஆய்வு செய்வார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மாணவர்களின் மன அழுத்தத்தைக் குறைக்க இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டிருப்பதாக அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். மேலும் கொரோனா சூழ்நிலை இருப்பதால் பள்ளிகள் திறப்பு குறித்து முடிவு செய்யவில்லை என்றும் அவர் கூறியுள்ளார்.

Next Story