தமிழகத்தில் புதிதாக 5,584 பேருக்கு கொரோனா பாதிப்பு - தமிழக சுகாதார துறை தகவல்


தமிழகத்தில் புதிதாக 5,584 பேருக்கு கொரோனா பாதிப்பு - தமிழக சுகாதார துறை தகவல்
x
தினத்தந்தி 9 Sept 2020 9:29 PM IST (Updated: 9 Sept 2020 9:29 PM IST)
t-max-icont-min-icon

தமிழகத்தில் புதிதாக 5,584 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.

சென்னை, 

தமிழகத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து உயர்ந்து கொண்டே வருகிறது. சுகாதாரத்துறை அமைச்சகம் இன்று வெளியிட்ட தகவலின் படி, தமிழகத்தில் இன்று புதிதாக 5,584 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 4,80,524 ஆக அதிகரித்துள்ளது.

தமிழகத்தில் இன்று 78 பேர் கொரோனா பாதிப்பால் உயிரிழந்துள்ளனர். இதன்மூலம் தமிழகத்தில் இதுவரை கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 8,090 ஆக அதிகரித்துள்ளது.

தமிழகத்தில் இன்று 6,516 பேர் கொரோனா சிகிச்சை முடிந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இதனால் தமிழகத்தில் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 4,23,241 ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் தற்போது 49,203 பேர் கொரோனாவிற்கு சிகிச்சை பெற்று வருவதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

சென்னையில் இன்று ஒருநாளில் 993 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னையை தவிர்த்து பிற மாவட்டங்களில் 4,591 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

Next Story