தாம்பரத்தில் நடுரோட்டில் கார் தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு


தாம்பரத்தில் நடுரோட்டில் கார் தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு
x
தினத்தந்தி 10 Sept 2020 3:45 AM IST (Updated: 10 Sept 2020 3:07 AM IST)
t-max-icont-min-icon

தாம்பரத்தில் நடுரோட்டில் கார் தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

தாம்பரம், 

சென்னையை அடுத்த பழைய பெருங்களத்தூர் பார்வதி நகரைச் சேர்ந்தவர் பாஸ்கர்(வயது 48). இவர், நேற்று காலை பழைய பெருங்களத்தூரில் இருந்து தாம்பரம் கோட்டாட்சியர் அலுவலகத்துக்கு தனது காரில் மேலும் 3 பேருடன் சென்று கொண்டிருந்தார்.

தாம்பரம் காந்தி ரோடு சந்திப்பு அருகே வந்தபோது திடீரென காரின் முன்பகுதியில் இருந்து புகை வந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த பாஸ்கர், காரை ஜி.எஸ்.டி. சாலையில் போலீஸ் வாகன சோதனை நடத்தும் இடம் அருகே நிறுத்தினார். பின்னர் பாஸ்கர் உள்பட காரில் இருந்த 4 பேரும் கீழே இறங்கினர்.

அடுத்த சில நொடிகளில் கார் மளமளவென தீப்பிடித்து எரிந்தது. இதுபற்றி தகவல் அறிந்துவந்த தாம்பரம் தீயணைப்பு நிலைய வீரர்கள் காரில் எரிந்த தீயை அணைத்தனர். எனினும் கார் முற்றிலும் எரிந்து நாசமானது. இதனால் அந்த பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. நடுரோட்டில் காரில் தீப்பிடித்ததற்கான காரணம் குறித்து தாம்பரம் போலீசார் விசாரித்து வருகிறார்கள்.

Next Story